கோவையில் பரபரப்பு...! மனைவியுடன் பேசிய நபரை நண்பர்களுடன் இணைந்து கடத்திய கும்பலை துரத்தி பிடித்த போலீசார்

சினிமா பாணியில், காரில் தப்பிக்க முயன்ற மூன்று குற்றவாளிகளை, ஒரு மணி நேரம் சேசிங் செய்து பிடித்த பந்தைய சாலை போலீசாருக்கு உயரதிகாரிகள் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்


கோவையில் குற்றத்தில் ஈடுபட்டு விட்டு காரில் தப்பி சென்ற மூவரை, ஒரு மணி நேரம் சேசிங் செய்து துரத்திப் பிடித்த பந்தய சாலை போலீசாருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

மதுரை அலங்காநல்லூரை சேர்ந்தவர் சோனமுத்து (37). இவருக்கு திருமணமாகி மனைவியும், ஒரு மகனும் உள்ளனர். இவர் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு, கோவை அவிநாசி ரோட்டில் உள்ள தனியார் வங்கியில் மேலாளராக பணியாற்றினார். அப்போது, அதே வங்கியில் சேல்ஸ் பிரிவில் பணியாற்றிய இளம்பெண்ணுடன் அவர் பழகிவந்ததாக கூறப்படுகிறது.

அதன் பின்னர், சோனமுத்து ராமநாதபுரம் நஞ்சுண்டாபுரம் ஸ்ரீபதி நகரில் தனது உறவினர்களுடன் தங்கி மற்றொரு நிதி நிறுவனத்தில் விற்பனை மேலாளராக பணியாற்றி வந்துள்ளார்.

இதற்கிடையே, அந்த இளம்பெண் மைல்கல் புதுபள்ளி வாசல் தெருவை சேர்ந்த சல்மான் பாரிஸ் (23) என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில், மீண்டும் சோனமுத்து அந்த இளம் பெண்ணிடம் செல்போனில் பேசி வந்ததாக கூறப்படுகிறது.

இதையறிந்த, சல்மான் பாரிஸ் செல்போனில் சோனமுத்துவை தொடர்பு கொண்டு கோவை வ.உ.சி. பூங்கா அருகே வர சொல்லியுள்ளார். அப்போது, சல்மான் பாரிஸ், அவரது நண்பர்கள் அக்பர் சாதிக் (26), கோட்டைமேடு வின்சென்ட் ரோட்டை சேர்ந்த முகமத் அக்சர் (24) ஆகியோருடன் வ.உ.சி.பூங்கா வந்துள்ளார்.

இதைத் தொடர்ந்து, சோனமுத்துவும் அவரது இரு நண்பர்களுடன் அங்கு வந்துள்ளார். அப்போது, சல்மான் பாரிஸ் தனது மனைவியுடனான செல்போன் தொடர்பு மற்றும் பணம் பரிமாற்றம்குறித்து கேட்டதாக கூறப்படுகிறது.

இதில், அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், மோசமான வார்த்தைகளால் அவரை திட்டியுள்ளனர். பின்னர்,

சோனமுத்துவை கத்திமுனையில் மிரட்டிய சல்மான் பாரிஸ் மற்றும் அவரது நண்பர்கள் அவர்கள் வந்த காரில் சோனமுத்துவை கடத்தினர்.

பின்னர், காரில் வைத்து அவரை தாக்கியுள்ளனர். கார் ஆத்துப்பாலம் பெட்ரோல் பங்க் அருகே நின்ற போது, சோனமுத்து காரில் இருந்து குதித்து தப்பியுள்ளார். இரத்த காயங்களுடன் தப்பிய சோனமுத்துவை பார்த்த, அக்கம்பக்கத்தினர், உடனே ஓடி வந்து காப்பாற்றினர்.

இதனால், பயந்து போன அந்த மூவர் காரில் தப்பினர். பின்னர் காயமடைந்த சோனமுத்துவை அங்கிருந்தவர்கள் மீட்டு கோவை அரசு மருத்துவமனை அனுப்பி வைத்தனர்.

சம்பவம் தொடர்பாக ரேஸ்கோர்ஸ் காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில், காவல் ஆணையாளர், பாலகிருஷ்ணன் உத்தரவின் அடிப்படையில் காட்டூர் சரக துணை ஆணையர் வின்சென்ட் தலைமையில் ரேஸ்கோர்ஸ் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விக்னேஷ், சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் பூபதி மற்றும் தலைமை காவலர் அருணகிரி உள்ளிட்ட தனிப்படை போலீசார் சம்பவ இடத்துக்கு காரில் விரைந்தனர்.

விரைந்து சென்ற போலீசார், காரில் தப்பிக்க முயன்றவர்களை துரத்தி பிடித்தனர். ஒரு மணி நேரம் துரத்திச் சென்ற போலீசார் இறுதியில், சல்மான் பாரிஸ், அக்பர் சாதிக் மற்றும் முகமத் அக்சர் ஆகிய 3 பேரை கைது செய்தனர்.

சினிமா போல, குற்றவாளிகளை ஒரு மணி நேரம் சேசிங் செய்து பிடித்தபோலீசாருக்கு உயர் அதிகாரிகள் பாராட்டி வருகின்றனர்.

Newsletter

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...