பல முறை கோரிக்கை வைத்தும் இன்னும் உதவித் தொகை ஆயிரம் ரூபாயிலிருந்து 3000 ரூபாயாக உயர்த்தி தாரவில்லை. எனவே, உதவித்தொகையை உயர்த்தி தரக்கோரி ஆவணம் செய்யுமாறு இன்று அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்து வருவதாக தெரிவித்தனர்.
கோவை: சுமார் 50 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் தேசிய பார்வையற்றோர் இணையமானது அனைத்து வகை மாற்றுத்திறனாளிகளுக்கும் இணைந்து செயல்பட்டு வருகிறது.இதில், தமிழக கிளையில் மட்டும்5000க்கும் மேற்பட்டவர்கள் உறுப்பினர்களாக பதிவு செய்துள்ளனர்.
இவர்களுக்கு மாதாந்திர உதவி தொகையாக ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வரும் நிலையில்,தற்பொழுது உள்ள பொருளாதார சூழலில் ஆயிரம் ரூபாய் போதுமானதாக இல்லை எனவும் அதனை 3000 ரூபாயாக உயர்த்தி தர வலியுறுத்தியும் பல மாதங்களாக போராடி வருகின்றனர்.
தமிழகத்தில் பல்வேறு இடங்களில் இவர்களது இந்த கோரிக்கையை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர்களிடம் மனு அளித்து வருகின்றனர். தமிழக முதல்வரிடத்திலும் இந்த கோரிக்கையை முன் வைத்துள்ளனர்.
பல முறை கோரிக்கை வைத்தும் இன்னும் உதவித் தொகை ஆயிரம் ரூபாயிலிருந்து 3000 ரூபாயாக உயர்த்தி தாரவில்லை. எனவே, உதவித்தொகையை உயர்த்தி தரக்கோரி ஆவணம் செய்யுமாறு இன்று அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்து வருவதாக தெரிவித்தனர்.
அதன் ஒரு பகுதியாக, கோவையில் மாவட்ட ஆட்சியர் அலுவலககத்தில் இந்த ஆணையத்தில் உள்ள உறுப்பினர்கள் சுமார் 50க்கும் மேற்பட்டோர் ஒருங்கிணைப்பாளர் சதாசிவம் தலைமையில் மனு அளித்தனர். முதல்வருக்கு அனுப்பவுள்ள கடிதத்தின் நகலையும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்வழங்கினர்.
இது குறித்து பேசிய ஒருங்கிணைப்பாளர் சதாசிவம், இந்த ஆட்சி அமைந்த பிறகு இரண்டு நிதி அறிக்கைகளிலும் தங்களது கோரிக்கைகள் வாசிக்கவில்லை எனவும் கலைஞர் பிறந்த நாளன்று அறிவிப்பார்கள் என எண்ணிய நிலையில் அப்பொழுதும் அறிவிக்கவில்லை, என வருத்தம் தெரிவித்தார்.
தற்பொழுது உள்ள விலைவாசியில் ஆயிரம் ரூபாய் போதாமல் இருப்பதாகவும், எனவே உடனடியாக அதனை 3000 ரூபாயாக உயர்த்தி தர வேண்டுமென
கேட்டுக்கொண்டார்.