வால்பாறை நடுமலை ஆற்றில் 108 விநாயகர் சிலைகள் கரைப்பு

வால்பாறை சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் வைக்கப்பட்ட 12 அடி உயரம் கொண்ட விநாயகர் சிலை உட்பட வால்பாறை பகுதியில், பிரதிஷ்டை செய்யப்பட்ட, 108 சிலைகளையும் வாகனத்தில் ஏற்றி வால்பாறை பிரதான சாலையான காந்தி சிலை, வாழைத்தோட்ட வழியாக சென்று மீண்டும் சுப்பிரமணி கோவில் வீதியில் வந்து நடுமலை ஆற்றில் கிரேன் மூலம் சிலைகள் ஒவ்வொன்றாக கரைக்கப்பட்டது.


கோவை: கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் 108 விநாயகர் சிலை ஆற்றில் கரைக்கப்பட்டது. கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி விழாவை அடுத்து கொரோனா கட்டுப்பாடு நீடித்ததால் விநாயகர் சதுர்த்தி விழாவை அரசு கட்டுப்பாடுடன் கொண்டாடினர்.

இந்நிலையில் இந்த ஆண்டு அரசு கட்டுபாடை நீக்கி விநாயகர் சதுர்த்தி விழாவை மிக விமர்சையாக மக்கள் கொண்டாடினர். வால்பாறை பகுதியில் இந்து முன்னணி அமைப்பினர் ஏ எஸ் டி சேகர் மாவட்ட துணை தலைவர் தலைமையில் மாநிலச் செயலாளர் சி எம் அண்ணாதுரை முன்னிலையில் வால்பாறையில் கடந்த 31ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு வால்பாறை மற்றும் எஸ்டேட் பகுதிகளில் இருந்து 108 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டது.



தலைமை சிலையாக வால்பாறை சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் 12 அடி உயரம் கொண்ட விநாயகர் சிலை வைக்கப்பட்டது. அதன்படி, வால்பாறை பகுதியில், பிரதிஷ்டை செய்யப்பட்ட, 108 சிலைகளையும் வாகனத்தில் ஏற்றி வால்பாறை பிரதான சாலையில் காந்தி சிலை, வாழைத்தோட்ட வழியாக சென்று மீண்டும் சுப்பிரமணி கோவில் வீதியில் வந்து நடுமலை ஆற்றில் கிரேன் மூலம் சிலைகள் ஒவ்வொன்றாக கரைக்கப்பட்டது.

கொட்டும் மழையிலும், மக்கள் சிலை கரைப்பு நிகழ்ச்சியை விமர்சையாக கொண்டாடினர். கோவை மாவட்ட கண்காணிப்பாளர் மற்றும் காவல் துறையினர் என சுமார் 270 காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...