கொங்குநாட்டு உணவுகளை சமைத்து அசத்திய கோவை சங்கரா கல்லூரி மாணவர்கள்


கோவை விழாவின் ஒரு பகுதியாக கோவை சங்கரா கல்லூரியில் இன்று கொங்குநாட்டு சமையல் என்ற தலைப்பின் கீழ் மாணவர்களுக்கான சமையல் போட்டி நடைபெற்றது.



சங்கரா கல்லூரியின் சமையல் கலை மற்றும விடுதி மேலாண்மை துறை ஒருங்கிணைத்து நடத்திய இப்போட்டியினை துணை இணைச் செயலாளர் நித்யா ராமச்சந்திரன் துவக்கி வைத்தார்.



இதில் 50-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்டு கொங்கு நாட்டின் உணவு வகைகளை சமைப்பதில் தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.

இப்போட்டியின் போது மாணவர்கள், கடலை லட்டு, கம்பு அல்வா, தங்கப்பால் அல்வா, இளநீர் பாயாசம், பேரிச்சை லட்டு, சிவப்பு அரிசி அல்வா, ராகி சாக்லேட் லட்டு உள்ளிட்ட பல உணவுகளை செய்து அசத்தினர்.



இதைத்தொடர்ந்து, அக்கல்லூரியின் துணை முதல்வர் டாக்டர் பெர்னார்ட் எட்வர்டு, சமையல் கலை மற்றும் விடுதி மேலாண்மை துறை சமையல் கலை நிபுணர் ஆனந்தராஜ் ஆகிய இருவரும் மாணவர்களால் சமைக்கப்பட்ட உணவுகளை சுவைத்துப்பார்த்து பரிசுப் பொருட்களை வழங்கினர்.



இதில், முதல் பரிசை தருன் என்னும் மாணவர் பெற்றார். இரண்டாம் பரிசை வித்யா மோள் என்பவரும், ராஜேஷ்வரன் என்னும் மாணவர் மூன்றாம் பரிசும் பெற்றனர்.

வெற்றிபெற்ற மாணவர்களுக்கு கோவை விழா குழுவினர் பரிசுகளை வழங்கி பாராட்டுத்தெரிவித்தனர்.

நிரைவாக துணை முதல்வர் பெர்னார்ட் எட்வர்டு அனைவருக்கும் நன்றியுரை வழங்கினார்.

Newsletter

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...

வாக்கு எண்ணிக்கை மையத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் - கட்சியினருக்கு கோவை ஆட்சியர் எடுத்துரைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கை நாளில் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குற...

போர் பதற்றத்தால் வளைகுடா நாடுகளை தவிர்த்து சிங்கப்பூர், மலேசியாவுக்கு படையெடுக்கும் கோவை மக்கள்

கோடைகால விடுமுறையையொட்டி கோவை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஈரான்-இஸ்ரேல் போர் பதற்...

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...