விநாயகர் சிலை விஜர்சனம்: பாதுகாப்பு வளையத்திற்குள் வந்த கோவை மாநகர்!!

இன்று முத்தண்ணன் குளத்தில் 286 சிலைகள் கரைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விநாயகர் விஜர்சனத்தில் அசம்பாவிதம் எதுவும் நடைபெறாமல் தடுக்க, பாதுகாப்பு பணியில் சுமார் 1900 போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.


கோவை: கடந்த 31 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, மாநகரில் இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி, பாரத் சேனா, அனுமன் சேனா, இந்து பாரத் சேனா உள்ளிட்ட இந்து அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் சார்பாக பொது இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டன.

அதன்படி, புறநகரில் 1556 சிலைகள் என மொத்தம் பொது இடங்களில் 538 சிலைகள் வைக்கப்பட்டன. மேலும், பொதுமக்களும் தங்கள் வீடுகளில் சிறிய அளவிலான சிலைகளை வைத்து வழிபாடு செய்தனர்.

வழிபாட்டுக்கு பின்னர் விநாயகர் சிலைகள் நேற்று முன் தினம் மேள தாளம் முழங்க நகர்வலம் வந்து கோவையில் உள்ள அனுமதிக்கப்பட்ட குளங்களில் கரைக்கப்பட்டன. குறிப்பாக, குறிச்சி குளம், சிங்காநல்லூர் குளம், முத்தண்ணன் குளம், குனியமுத்தூர் குளம், போத்தனூர் குளம் மற்றும் புறநகரில் உள்ள குளங்களில் விநாயகர் விஜர்சனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, இன்று முத்தண்ணன் குளத்தில் மட்டும் விஜர்சனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, இன்று முத்தண்ணன்

குளத்தில் 286 சிலைகள் கரைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

லாரிகள், டெம்போக்கள், ஆட்டோக்களில் குளக்கரைக்கு கொண்டு வரப்படும் விநாயகர் சிலைகளை பாதுகாப்புடன் கரைக்க வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

களத்தில் அதிவிரைவுப்படை..! பாதுகாப்பு வளையத்திற்குள் கோவை.

இன்று நடைபெறவுள்ள விநாயகர் ஊர்வலம், விஜர்சனத்தில் அசம்பாவிதம் எதுவும் நடைபெறாமல் தடுக்க, பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, கோவை மாநகரம் முழுவதும் சுமார் 1900 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும், அதிவிரைவு படையை சேர்ந்த 360 பேர் அடங்கிய 3 குழுக்களும் உக்கடம் உள்ளிட்ட பகுதிகளில் பாதுகாப்பு பணியில் உள்ளனர். இதனால், ஒட்டுமொத்த கோவை மாநகரமும் காவல்துறை பாதுகாப்பு வளையத்திற்குள் வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...