வால்பாறையில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் சார்பில் ஊட்டச்சத்து மாத விழா கொண்டாட்டம்.

குழந்தைகளுக்கு ஊட்டசத்துள்ள உணவுகள், 2 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு பால் சம்பந்தப்பட்ட உணவுகளை வழங்க வேண்டும் என பெற்றோர்களுக்கு பல்வேறு அறிவுரைகள் வழங்கப்பட்டன.


கோவை: வால்பாறையில் தமிழ்நாடு ஒருகிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் சார்பில் ஊட்டச்சத்து மாதம் கொண்டாடப்பட்டது.



ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதம் ஊட்டச்சத்து மாதமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதன்படி வால்பாறை பகுதியில் உள்ள நடுமலை, கராஜ் நகர், காந்தி நகர் போன்ற பகுதியில் இயங்கும் குழந்தைகள் காப்பகத்தில் ஊட்டச்சத்து மாத விழா கொண்டாடப்பட்டது.

இந்த விழாவில் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்துகுறைபாடுகள் இல்லாமல் குழந்தைகளை வளர்ப்பது குறித்து பெற்றோர்களுக்கு விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.



குழந்தைகளுக்கு காய்கறி உணவு, சிறு தானிய உணவுகள் போன்றவற்றை தரவேண்டும். மேலும் 2 வயது வரை குழந்தைகளுக்கு பால் மற்றும் பால் கலந்த உணவுகளை கொடுக்க வேண்டும், ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை வழங்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டது.

இந்த நிகழ்வில், நகர மன்ற துணை தலைவர் செந்தில், குழந்தைகள் மேற்பார்வையாளர் நாகஜோதி, ஊழியர்கள் டென்சிங், ஜெயராம், கீதா ராணி, இமக்லெட், காலிஷ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...