கோவையில் "கேப்டன்" பட புரொமோஷன்: விஜயகாந்துக்கு நடிகர் சங்கம் சார்பில் கண்டிப்பாக பாராட்டு விழா நடத்த வேண்டும் - நடிகர் ஆர்யா.

வரும் 8 ஆம் தேதி ஆர்யா நடிப்பில் வெளியாகும் "கேப்டன்" திரைப்படத்தின் புரோமோஷன் பணிகளில் தற்போது ஆர்யா உள்ளிட்ட படக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.


கோவை: கேப்டன் விஜயகாந்துக்கு நடிகர் சங்கம் சார்பில் கண்டிப்பாக பாராட்டு விழா நடத்த வேண்டும், என கோவையில் நடிகர் ஆர்யா தெரிவித்துள்ளார்.

ஆர்யா நடிப்பில் உருவாகியுள்ள கேப்டன் என்ற திரைப்படம் வரும் 8ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதற்கான, புரோமோஷன் பணிகளில் தற்போது ஆர்யா உள்ளிட்ட படக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.



இதன் ஒரு பகுதியாக, நடிகர் ஆர்யா கோவையில் நடைபெற்ற புரோமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற நடிகர் ஆர்யா, நிகழ்ச்சிக்கு பின் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அப்போது பேசிய அவர், வரும் 8ஆம் தேதி வெளியாக உள்ள கேப்டன் திரைப்படத்தின் கரு, ராணுவத்தை கதைக்களமாக கொண்டுவித்தியாசமானதாக அமைக்கப்பட்டுள்ளது.கேப்டன் திரைப்படம் ஹாலிவுட் திரைப்படங்களை போல இருக்கும்.



தமிழ்நாடு அரசு ராஜா ராணி திரைப்படத்திற்கு விருது கொடுத்தது எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது.நல்ல கதை கொண்ட படங்களை பொதுமக்கள் விரும்புகிறார்கள்.

நடிகரும், தேமுதிக தலைவருமான கேப்டன் விஜயகாந்துக்கு, நடிகர் சங்கம் மூலமாக கண்டிப்பாக பாராட்டு விழா நடத்த வேண்டும்.



இந்திய ராணுவ வீரர்களுக்கு பேரும் புகழும் கிடைப்பதில்லை. ஆனால், நடிகர்களுக்கு கிடைக்கிறது என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், இந்திய ராணுவ வீரர்கள் வாழ்க்கையை கொடுக்கிறார்கள். எதையும் அவர்கள் பெரிதாக எண்ணுவதில்லை, என தெரிவித்தார்.



Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...