ஓணம் பண்டிகை நெருங்க நெருங்க பூக்களின் விலை மேலும் உயரும் - பூ வியாபாரிகள் கருத்து.

வரும் 8 ஆம் தேதி ஓணம் பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில், கேரளாவுக்கு அதிகளவிலான பூக்கள் ஏற்றுமதி செய்யப்படும் என்பதால் பூக்கள் விலை மேலும் அதிகரிக்கும் என பூ வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.


கோவை: ஓணம் பண்டிகை நெருங்குவதால் இனி பூக்கள் விலை மேலும் உயரும் என பூ வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

கேரளாவின் பாரம்பரிய விழாவான ஓணம் பண்டிகை வரும் 8ம் தேதி கொண்டாடப்பட உள்ளது.

பொதுவாக ஓணம் பண்டிகைக்கு கேரள மாநிலம் பாலக்காடு, மன்னார்காடு உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு கோவை மாவட்டத்தில் இருந்து அதிகப்படியான பூக்கள்(மல்லி, முல்லை, கலர் பூக்கள்) ஏற்றுமதி செய்யப்படுவது வழக்கம். இந்நிலையில் இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி, முகூர்த்த நாட்கள்என தொடர்ச்சியாக விழாக்கள் வருவதால் பூக்களின் விலை உயர்ந்த வண்ணமே உள்ளது.

இந்நிலையில் அடுத்த வாரம் ஓணம் பண்டிகை வரவுள்ளதை ஒட்டியும் முகூர்த்த நாட்கள் தொடர்ச்சியாக வருவதனாலும் பூக்களின் விலை உயர்ந்துள்ளது.

இது குறித்து பூ வியாபாரிகள் கூறுகையில், மல்லி, முல்லை பூக்களுக்கு வரும் 8ஆம் தேதி வரை நல்ல விலை இருக்கும். முகூர்த்த நாட்கள் எல்லாம் சேர்ந்து வரும் போது இன்னும் விலை அதிகரிக்கும்.

கலர் பூக்களை பொறுத்தவரை ஓணம் பண்டிகையை ஒட்டி தான் அதிகமாக வியாபாரம் செய்யப்படும். இது வருடத்திலேயே மிக பெரிய கலர் பூக்கள் வியாபாரம். 8ம் தேதி வரை விலை உயர்வு இருக்கும்.

கோவையில் இருந்து செண்டு மல்லி அதிகம் வியாபாரம் செய்யப்படும். ரோஜா, அரளி ஆகியவை சுமார் 300 ரூபாய் வரையிலும் விற்பனை செய்யப்படும்.மல்லி முல்லை ஆகியவை 1000 ரூபாய் வரை விற்பனை செய்யப்படும்.

ஓணம் பண்டிகை நெருங்க நெருங்க பூக்கள் விலை இன்னும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. அதேபோல் கேரளாவில் மழை இருந்தால் விலை குறைய வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

இன்றைய பூக்கள் விலை நிலவரம்:

செண்டுமல்லி - ரூ.60

வெள்ளமல்லி - ரூ.240

வாடாமல்லி - ரூ.120

கலர் செவ்வந்தி - ரூ.320

அரளி -ரூ.200

ரோஜா - ரூ.240

மல்லிகை - ரூ.1,200

என்ற விலைக்கு விற்பனை செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...