அதிமுக என்றால் எடப்பாடி பழனிசாமி தான் புதிய தெம்புடன் திமுகவை எதிர்கொள்வோம் - திருப்பூரில் பொள்ளாச்சி ஜெயராமன்

அதிமுக பொதுக்குழு தொடர்பாக தனி நீதிபதி அளித்த உத்தரவு ரத்து செய்யப்படுவதாக தீர்ப்பு வெளியானதையடுத்து, ஓ.பன்னீர்செல்வம் மேல்முறையீடு செய்தால் கூட வழக்கு உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்யும் என பொள்ளாச்சி ஜெயராமன் கூறியுள்ளார்.


திருப்பூர்: அதிமுகவில் இனி இரட்டை தலைமை என்ற பேச்சுக்கே இடமில்லை, எப்போதும் ஒற்றை தலைமை தான் இருக்கும், என முன்னாள் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் தெரிவித்துள்ளார்.

அதிமுக பொதுக்குழு தொடர்பாக தனி நீதிபதி அளித்த உத்தரவு ரத்து செய்யப்படுவதாக 2 நீதிபதிகள் கொண்ட அமர்வு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதுதொடர்பாக அதிமுகவின் திருப்பூர் மாநகர் மாவட்ட செயலாளரும், முன்னாள் துணை சபாநாயகருமான பொள்ளாச்சி ஜெயராமன் செய்தியாளர்களை சந்தித்தார்.



அப்போது பேசிய அவர், எத்தனையோ சோதனைகளை சந்தித்து அதிமுக என்றால் எடப்பாடி பழனிசாமி தான் என்பதை தீர்ப்பின் மூலம் காட்டியுள்ளார்கள். அதிமுக கொடி, அதிமுகவின் 1.5 கோடி தொண்டர்கள் இனி இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு தான் சொந்தம். வேறு யாரும் சொந்தம் கொண்டாட முடியாது. இனி யாரும் கூக்குரல் இட முடியாது.

இனி புதிய தேம்போடு திமுகவை விரைவில் வீட்டுக்கு அனுப்பிவிட்டு, அதிமுக ஆட்சியை அமைக்க மக்கள் தயாராவார்கள். தென் மாவட்டங்கள் எப்போதுமே அதிமுகவிற்கு ஆதரவாக உள்ளது. இப்பொழுதும், இப்படி தான் உள்ளது. இனிமேல் இரட்டை தலைமை என்ற பேச்சுக்கு இடமே இல்லை எப்பொழுதும் ஒற்றை தலைமைதான்.

சசிகலா இன்னும் அதிமுக கொடியை பயன்படுத்துவது தொடர்பாக கேட்கப்பட்ட கேள்விக்கு, கட்சியை இன்னார் தான் வழிகாட்ட வேண்டும் என நீதிமன்றம் சொன்ன பிறகும் சசிகலா கட்சி கொடியை கட்டிக்கொண்டு இருந்தால் அது தவறு தான். சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

திமுக விற்கு எதிராக இனி கடுமையாக அதிமுக களத்தில் போராடும். இதுவரை தலைமை குழப்பத்தில் இருந்த நிலையில் இனி அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தான் என்ற நிலையில், கடுமையாக போராடுவோம். இனிமேல் ஓ.பன்னீர்செல்வம் தரப்பு மேல்முறையீடு செய்தாலும் அதை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்யும்.

அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தமிழக மக்களுக்கு பாதுகாப்பு அரணாக இருப்பார். நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி அமோக வெற்றி பெறும். இவ்வாறு அவர் பேசினார்.



இதனயடுத்து எம்.ஜி.ஆர் சிலைக்கு மாலை அணிவித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி அதிமுக தொண்டர்கள் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...