கொப்பரை தேங்காய் கொள்முதல் - செப். 30 வரை கால அவகாசம் நீட்டிப்பு : மாவட்ட ஆட்சியர் சமீரன் அறிவிப்பு

கொப்பரை தேங்காய் கொள்முதல் விலை ரூ.110ஆக உயர்த்தப்பட்டுள்ள நிலையில், தொகை நேரடியாக விவசாயிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்க திட்டமிடப்பட்டுள்ளது.


கோவை: கொப்பரை தேங்காய்களை கொள்முதல் செய்வதற்கான கால அவகாசம் வரும் செப்டம்பர் 30ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக அரசு தென்னை சாகுபடி செய்யும் விவசாயிகளின் நலனுக்காக நிர்ணயிக்கப்பட்ட தரம், அளவு கொண்ட அரவை தேங்காய் கொப்பரை கிலோ 105.90 ல் இருந்து 110 ரூபாயாக கொள்முதல் செய்யப்படும்.

கோவை மாவட்டத்தில் பொள்ளாச்சி, நெகமம், செஞ்சேரி, ஆனைமலை மற்றும் கிணத்துக்கடவு ஆகிய ஐந்து ஒழுங்குமுறை விற்பனை கூடங்களை கொப்பரைக் கொள்முதல் நிலையங்களாக அரசு அறிவித்து கொள்முதலை அதிகரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும், ஜூன் இரண்டாம் தேதி முதல் தொண்டாமுத்தூர் மற்றும் அன்னூர் ஆகிய இரண்டு விற்பனை கூடங்களை புதிதாக கூடுதல் கொள்முதல் நிலையங்களாக மாற்றப்படும்.

நடப்பாண்டில் கொப்பரை தேங்காய் கொள்முதல் செய்வதற்கான கால அவகாசம் நிறைவடைய இருந்த நிலையில், வரும் செப்டம்பர் 30ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இது நாள் வரை 6212.50 டன் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தின் மூலம் பயன்பெறும் விவசாயிகள் நிலத்தின் சிட்டா, அடங்கள், ஆதார் அட்டை நகல் மற்றும் வங்கி கணக்கு ஆகிய விவரங்களுடன் அருகில் உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூட கண்காணிப்பாளரை அணுகி பதிவு செய்து கொள்ளலாம்.

இத்திட்டத்தின் மூலம் கொள்முதல் செய்யப்படும் கொப்பரை தேங்காய்க்கு உரிய தொகை விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...