விநாயகர் சதுர்த்தி: திருப்பூரில் இந்து முன்னணி சார்பில் 1,200-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு

திருப்பூர் மாவட்டத்தில் இந்து முன்னணி சார்பில் 1,200க்கும் மேற்பட்ட இடங்களில் விநாயகர் சிலைகளை வைக்கப்பட்டு வழிபாடு செய்யப்பட்டு வருவதாக இந்து முன்னணி அமைப்பின் மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் தெரிவித்துள்ளார்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தியையொட்டி 1200 சிலைகள் வைக்கப்பட்டு வழிபாடு செய்யப்பட்டு வருவதாக இந்து முன்னணி அமைப்பின் மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் இன்றைய தினம் விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. பொதுமக்கள் வீடுகளில் சிலை வைத்து பூஜை செய்தும், கோவில்களுக்கு சென்றும் விநாயகரை தரிசனம் செய்து வருகின்றனர்.

இதுதொடர்பாக பேசிய இந்து முன்னணி அமைப்பின் மாநில தலைவர் காடேஸ்வர சுப்ரமணியம், திருப்பூர் மாவட்டத்தில் மட்டும் இந்து முன்னணி சார்பில் 1,200க்கும் மேற்பட்ட இடங்களில் விநாயகர் சிலைகளை வைக்கப்பட்டு வழிபாடு செய்யப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார்.



இதுதவிர பல்வேறு இந்து அமைப்புகளும் விதம்விதமான விநாயகர் சிலைகளை வைத்து வழிபாடு நடத்தி வருகின்றனர்.



இதில் திருப்பூர் கோட்டை மாரியம்மன் கோவிலில் குபேர விநாயகர் சிலை, அரண்மனை புதூரில் வில் அம்புடன் கூடிய ராமாவதார விநாயகர் சிலை அமைக்கப்பட்டுள்ளது.



இதேபோல், காய்கறி மார்க்கெட் பகுதியில் யானை மீது அமர்ந்து இருக்கும் 18 அடி உயர கஜராஜ விநாயகர் சிலை என பல்வேறு வடிவங்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன.



மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் வைக்கபப்ட்டுள்ள விநாயகர் சிலைகளுக்கு காலை முதல் கணபதி ஹோமம் உள்ளிட்ட பூஜைகள் செய்யப்பட்டு வழிபாடுகள் நடத்தப் படுகின்றன.

இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு விநாயகருக்கு கொழுக்கட்டை உள்ளிட்ட பிரசாதங்கள் படைத்து சாமி தரிசனம் செய்தனர். பலவேறு பகுதிகளில் அன்னதானமும் வழங்கப்பட்டது.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...