ரயில் நிலையம் மற்றும் காதர் பேட்டை பகுதிகளுக்கு வரும் வடமாநில பயணிகளுக்கு பிஸ்கட்டில் மயக்க மருந்து தடவி கொடுத்து, பணம், செல்ஃபோன், நகைகளை திருடி வந்துள்ளனர். இவர்கள், பீகாரில் இருந்து வரும் போதே தூக்க மாத்திரைகளை வாங்கி வந்து இது போன்ற செயல்களில் ஈடுபட்டு வந்தாக தெரியவந்துள்ளது.
திருப்பூர்: திருப்பூர் இரயில் நிலையத்திற்கு வரும் வடமாநில இரயில் பயணிகளை குறிவைத்து, மயக்க மருந்து தடவிய கிரீம் பிஸ்கட்டுகள், டீ, குளிர்பானங்கள் ஆகியவற்றை கொடுத்து அவர்களது செல்போன், பணம், உடைமைகளை திருடிச் சென்ற சம்பவத்தில் ஈடுபட்ட கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர்.
கடந்த வாரம், திருப்பூர் இரயில் நிலையத்தில், வடமாநில பயணிகளை குறி வைத்த ஒரு வடமாநில கும்பல், அவர்களிடம் நாங்களும் உங்கள் மாநிலத்தை சேர்ந்தவர்கள் தான் நட்பாக பழகி மயக்க மருந்து தடவிய கிரீம் பிஸ்கட்டுகள், டீ, குளிர்பானங்கள் ஆகியவற்றை சாப்பிடுவதற்கு கொடுத்துள்ளனர். பின்னர், அவர்கள் மயங்கியவுடன் செல்போன், பணம் மற்றும் அவர்களது உடைமைகளை திருடிச் சென்ற சம்பவம் நடைபெற்றுள்ளது.
இந்த நூதன திருட்டு குறித்து, திருப்பூர் இருப்பு பாதை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்த நிலையில், திருப்பூர் மட்டுமல்லாது சமீப காலங்களாக தமிழகம் முழுவதும் இது போன்று மயக்க மருந்து கொடுத்து உடைமைகளை திருடும் சந்தேக நபர்களை உடனடியாக கைது செய்ய இருப்புப்பாதை கூடுதல் இயக்குநர் வனிதா உத்தரவிட்டார்.
இதையடுத்து, கோவை இருப்புப்பாதை காவல் துணை கண்காணிப்பாளர் யாஸ்மின் மற்றும் இருப்புப்பாதை காவல் ஆய்வாளர் பிரியாசாய் ஸ்ரீ தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.
அதன்படி, நூதன கொள்ளை முயற்சியில் ஈடுபட்டு வரும் வடமாநில கும்பலை பிடிக்க, திருப்பூர் ரயில் நிலையத்தில் இருந்த சிசிடிவி காட்சிகள் மற்றும ரயில் நிலையத்தின் அருகில் உள்ள பேக்கரிகளில் உள்ள சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து வந்தனர்.
மேலும், சம்பவம் நடந்த போது அப்பகுதியில் இருந்த செல்போன் எண்களை ரயில்வே காவல்துறை சைபர் செல் உதவியுடன் எடுத்து, மயக்க மருந்து கொடுத்து பொருட்களை கொள்ளையடித்த நபர்களை தீவிரமாக கண்காணித்து வந்தனர்.
இந்நிலையில், இன்று திருப்பூர் இரயில் நிலைய பார்சல் அலுவலகம் அருகே, மயக்க பிஸ்கட் கொடுத்து திருடும் சம்பவத்தில் ஈடுபட்ட பீகார் மாநிலம் சஹால் ஆரரியா எனும் சல்மான் (27), மன்வார் ஆலம்(25), முகமத் ஆசாத்(32), அப்துல்லா(31), மக்முத் ஆலம்(31) ஆகிய 5 பேரை போலீசார் கையும் களவுமாக பிடித்தனர்.
இதனிடையே, அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் உண்மைகள் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
பிடிபட்ட வடமாநில கும்பலை சேர்ந்தவர்கள் அனைவரும் பீகார் மாநிலத்தில் உள்ள ஒரே கிராமத்தை சேர்ந்தவர்கள். இவர்கள், பல்லடம் அருகே உள்ள குன்னாங்கல் பாளையத்தில் உள்ள சூர்யா காலனியில் தங்கி கொண்டு,அங்குள்ள பனியன் நிறுவனங்களில் வேலை செய்து வந்துள்ளனர்.
திருப்பூர் இரயில் நிலையம் மற்றும் காதர் பேட்டை பகுதிகளுக்கு வரும் வட மாநில பயணிகளை குறி வைத்து, பிஸ்கட்டில் மயக்க மருந்து தடவி கொடுத்து, திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்துள்ளனர். பின்னர், கொள்ளையடிக்கும் பணம் மட்டும் பொருட்களை கொண்டு தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கி உல்லாசமாக வாழ்ந்துள்ளனர்.
மேலும், இவர்கள் பீகாரில் இருந்து இங்கு வரும் போதே தூக்க மாத்திரைகளை மருத்துவர் பரிந்துரை சீட்டு இன்றி ரூ.100 ரூபாய்க்கு வாங்கி வந்து இது போன்ற செயல்களில் ஈடுபட்டு வந்தாக தெரிவித்துள்ளனர்.
இவர்களை கைது செய்த போலீசார், திருடப்பட்ட 30 செல்போன்கள், ரூ.10 ஆயிரம் பணம் மற்றும் மயக்க மருந்து கலந்த பிஸ்கட்டுகள், மயக்க மாத்திரைகள், மயக்க மாத்திரைகளை பொடியாக்கிய பாக்கெட்டுகள் ஆகியவற்றை கைப்பற்றி உள்ளனர்.
இந்த கும்பலை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.