ஸ்ரீமதி மரண வழக்கை முறையாக விசாரிக்க வேண்டும் - திருப்பூரில் செல்போன் கோபுரத்தில் ஏறி இளைஞர் போராட்டம் - பரபரப்பு..!

திருப்பூர் கொங்கு மெயின் ரோடு ராம் காலனியை சேர்ந்த மக்கள் பாதுகாப்பு அமைப்பின் வடக்கு மாவட்ட இளைஞரணி தலைவர், செல்போன் கோபுரத்தில் ஏறி போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.


திருப்பூர்: கள்ளக்குறிச்சியில் பள்ளி கட்டிடத்தில் இருந்து விழுந்து இறந்த மாணவி ஸ்ரீமதியின் வழக்கை முறையாக விசாரிக்க கோரி இளைஞர் ஒருவர் செல்போன் கோபுரத்தின் மீது ஏறி போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

திருப்பூர் பி.என்.ரோடு, மில்லர் பேருந்து நிறுத்தம் அருகே செல்போன் கோபுரம் ஒன்று உள்ளது.



அங்கு வந்த இளைஞர் ஒருவர் திடீரென துண்டு பிரசுரங்களுடன் செல்போன் கோபுரத்தின் மீது ஏறி கோஷங்களை எழுப்பினார்.

அவரது செயலை கண்ட அக்கம்பக்கத்தினர் இதுகுறித்து திருப்பூர் வடக்கு காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். இதனைத்தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் செல்போன் கோபுரம் மீது ஏறி நின்று கொண்டிருந்த வாலிபரிடம் பேச்சுவார்த்தை நடத்தி, அவரை கீழே இறங்கும்படி அறிவுறுத்தினர்.



பின்னர், கீழே இறங்கிய நபரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், அந்த இளைஞர், திருப்பூர் கொங்கு மெயின் ரோடு ராம் காலனியை சேர்ந்த மனோஜ்குமார் (20) என்பதும், மக்கள் பாதுகாப்பு அமைப்பின் வடக்கு மாவட்ட இளைஞரணி தலைவர் என்பதும் தெரியவந்தது.

மேலும், கள்ளக்குறிச்சி தனியார் பள்ளியில் இறந்த மாணவி ஸ்ரீமதியின் வழக்கை முறையாக விசாரிக்க வேண்டும். என்றும் அந்த வழக்கில் தொடர்புடைவர்களுக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

அதேபோல், நீண்ட ஆண்டுகளாக சிறையில் உள்ள இஸ்லாமிய சிறைவாசிகளை விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

இதனைத்தொடர்ந்து, இளைஞர் மனோஜ்குமாரை போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். இந்த சம்பவம் காரணமாக அப்பகுதியில் சில மணி நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.

Newsletter

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...