சத்துணவு ஊழியர்கள் மூலமாகவே காலை சிற்றுண்டி திட்டத்தை செயல்படுத்திட வேண்டும் - கோவையில் தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

சத்துணவு ஊழியருக்கு வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியத்தை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திற்குள் சுமார் 50-க்கும் மேற்பட்ட தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



கோவை: ஓய்வு பெற்ற ஊழியருக்கு பணிக்கொடை ஐந்து லட்சம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் வழங்கிட வேண்டும் உள்ளிட்ட மூன்று கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தினர், மாநில அளவில் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.



அதன் ஒரு பகுதியாக, கோவையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திற்குள் சுமார் 50-க்கும் மேற்பட்ட தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தினர் அவர்களது கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

"சத்துணவு ஊழியருக்கு வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியத்தை வழங்க வேண்டும், ஓய்வு பெற்ற ஊழியருக்கு பணிக்கொடை ஐந்து லட்சம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் வழங்கிட வேண்டும், காலை சிற்றுண்டி திட்டத்தில் பணிபுரியும் அமைப்பாளர் சமையலர் உதவியாளர் மூலமாகவே காலை சிற்றுண்டி சமைத்து வழங்கிட உத்திரவிட வேண்டும்" ஆகிய மூன்று கோரிக்கைகளை வலியுறுத்தினர்.



கோவை மாவட்ட தலைவர் ராமசாமி தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், மாவட்ட பொருளாளர் நடராஜன், மாவட்ட செயலாளர் பழனிச்சாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.

அப்போது பேசிய அவர்கள், காலை சிற்றுண்டி திட்டம் தனியாருக்கு ஒப்படைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளதாகவும், இதனை மாற்றி சத்துணவு ஊழியர்கள் மூலமாகவே காலை சிற்றுண்டி திட்டத்தை செயல்படுத்திட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.



மேலும், ஓரிரு மாதங்களில் சென்னையில் சத்துணவு சங்கத்தினர் இணைந்து பெரும் மாநாடு நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...