மத்திய அரசை கண்டித்து திருப்பூரில் 12 இடங்களில் இந்திய கம்யூ. கட்சியினர் சாலை மறியல்

மத்திய அரசின் தவறான பொருளாதார கொள்கை , மின்சார சட்ட திருத்த மசோதா, நூல் விலை உயர்வை கட்டுப்படுத்த தவறியதால், பின்னலாடை நலிவடைந்ததாக இந்திய கம்யூ. கட்சியினர் முழக்கங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.



திருப்பூர்: திருப்பூரில் சமீபத்தில் நடைபெற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில மாநாட்டின் முடிவின்படி, மத்திய அரசை கண்டிக்கும் வகையில் இன்று (30.08.2022) மாநிலம் முழுவதும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மறியல் போராட்டம் நடத்தப்பட்டது.

திருப்பூரில் சமீபத்தில் நடைபெற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாட்டில், மத்திய அரசின்தவறான பொருளாதார கொள்கையால் மக்கள் மற்றும் தொழில்கள் கடுமையாக பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர் என்று சுட்டிக்காட்டப்பட்டது.

அதேபோல, திருப்பூர் பின்னலாடை தொழில் நலிவடைந்ததற்கு மத்திய அரசின் மின்சார சட்ட திருத்த மசோதா மற்றும் நூல் விலை உயர்வே காரணம் என குற்றம் சாட்டப்பட்டது. இவற்றை கண்டிக்கும் விதமாக, ஆகஸ்ட் 30 ஆம் தேதி மாநிலம் தழுவிய கண்டன போராட்டம் நடைபெறும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அதன்படி,திருப்பூர் மாநகரில் புதூர் பிரிவு , காமராஜர் சாலைஉள்ளிட்ட 12 இடங்களில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர் . இதில், காமராஜர் சாலையில் நடைபெற்ற மறியல் போராட்டத்தில் மாநகராட்சி துணை மேயர் எம்.கே.எம் பாலசுப்பிரமணியம் கலந்து கொண்டார்.



இந்த போராட்டத்தில், ஈடுபட்டவர்கள் மத்திய அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பி தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.



Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...