கொப்பரை தேங்காய்க்கான குறைந்தபட்ச ஆதார விலையை ரூ.150 ஆக உயர்த்த வேண்டும் - எம்.எல். ஏ பொள்ளாச்சி ஜெயராமன் மனு

கொப்பரை தேங்காய் கொள்முதல் செய்ய அவகாசம் குறைவாக உள்ளதால், அனைத்து முக்கிய கூட்டுறவு சங்கங்களின் மூலமாக கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆட்சியரிடம் எம்.எல். ஏ பொள்ளாச்சி ஜெயராமன் வலியுறுத்தல்.



கோவை: கொப்பரை தேங்காய்க்கான குறைந்தபட்ச ஆதார விலை ஒரு கிலோவிற்கு 105.90 ல் இருந்து 150 ஆக உயர்த்தி வழங்க வேண்டும், கொள்முதல் செய்யப்படும் கொப்பரைக்கான தொகையினை வாரம் ஒரு முறை காசோலை மூலம் கிடைப்பதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும்உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பொள்ளாச்சி சட்டமன்ற உறுப்பினர் பொள்ளாச்சி ஜெயராமன்,கோவை மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்தார்.



அவர் அளித்த மனுவில், மார்க்கெட்டில் தேங்காய் மற்றும் கொப்பரை விலை உயரும் வகையில் தமிழக அரசு ஆவணம் செய்ய வேண்டும்.

கொப்பரை கொள்முதல் செய்ய ஒரு மாத காலம் தான் அவகாசம் உள்ளதால், தற்போது நடைமுறையில் உள்ள வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடம் மூலம் மட்டுமே கொள்முதலை செய்யாமல் கடந்த காலங்களைப் போல் அனைத்து முக்கியமான கூட்டுறவு சங்கங்களின் மூலமாகவும் கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அதேபோல, கொள்முதல் செய்யப்படும் கொப்பரைக்கான தொகையை வாரம் ஒரு முறை காசோலை மூலம் கிடைப்பதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும். ஒவ்வொரு கொள்முதல் நிலையத்திற்கும் தனியாக USER ID வழங்க வேண்டும்.

மேலும், கொப்பரை தேங்காய்க்கான குறைந்தபட்ச ஆதார விலையை ஒரு கிலோவிற்கு 105.90-ல் இருந்து 150 ஆக உயர்த்தி வழங்கிட ஆவண செய்ய வேண்டும்.

இவ்வாறு அம்மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...