விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நடைபெற்ற கொடி அணிவகுப்பில், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் உட்பட 170 காவலர்கள் பங்கேற்றனர்.
நீலகிரி: நாடு முழுவதும் நாளைய தினம் (ஆகஸ்ட் 31) விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட உள்ள நிலையில்,தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இப்போதே விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டங்கள் களைகட்ட தொடங்கிவிட்டன.
விநாயகா் சதுா்த்தியை முன்னிட்டு, நீலகிரி மாவட்ட காவல் துறை சார்பாக, உதகையில் காவல்துறை சார்பாககொடி அணிவகுப்பு நடத்தப்பட்டது. காந்தல் முக்கோணம் பகுதியில் ஆரம்பித்த இந்த அணிவகுப்பு, பென்னட் மாா்க்கெட் வழியாக ரோகிணி ஜங்ஷன் வரையிலும், லாலி இன்ஸ்டிடியூட் முதல் சேரிங் கிராஸ் வழியாக ரவுண்டானா வரையிலும்நடத்தப்பட்டது.
நீலகிரி மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளா் மோகன் நவாஸ் தலைமையில் நடைபெற்ற இந்த கொடி அணிவகுப்பில்,துணை காவல் கண்காணிப்பாளா்கள், ஆய்வாளா்கள், சாா்பு ஆய்வாளா்கள் என 170 காவலா்கள் பங்கேற்றனா்.
விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று காவல்துறை சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.