எவ்வித முகாந்திரமும் இன்றி அரசு வருவாய் அதிகாரிகள் சந்தையை செயல்படுத்தக் கூடாது என்று சிறு வியாபாரிகளுக்கு அழுத்தம் அளித்து வருகின்றனர். இதனால், இந்த சந்தையை நம்பியுள்ள விவசாயிகளின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்படுகிறது என்று ஆட்சியரிடம் அளித்த மனுவில் தெரிவித்துள்ளார்.
கோவை: கோவை சின்னவேடம்பட்டி பகுதியில் பல ஆண்டுகளாக செயல்பட்டு வரும் சமுதாய வார சந்தையை மீண்டும் செயல்படுத்த ஆவணம் செய்ய வேண்டும், என்று கோவை கவுண்டம்பாளையம்சட்டமன்ற உறுப்பினர் பி.ஆர்.ஜி.அருண்குமார், மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார்.
அவர் அளித்துள்ள மனுவில், சின்னவேடம்பட்டி வாரச் சந்தைக்கு சுற்றுவட்டாரத்தில் உள்ள பல்வேறு ஊர்களில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட சிறு வியாபாரிகள் வியாபாரம் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில், எவ்வித முகாந்திரமும் இன்றி அரசு வருவாய் அதிகாரிகள் சந்தையை செயல்படுத்தக் கூடாது என்று சிறு வியாபாரிகளுக்கு அழுத்தம் அளித்து வருகின்றனர்.
இதனால், இந்த சந்தையை நம்பியுள்ள விவசாயிகளின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்படுகிறது. எனவே, இந்த வாரச் சந்தையை தொடர்ந்து தடையின்றி செயல்பட ஆவணம் செய்திட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ். சமீரனிடம் அளித்த மனுவில் சட்டமன்ற உறுப்பினர் பி.ஆர்.ஜி.அருண்குமார் கேட்டுக் கொண்டுள்ளார்.