கோவை காவலர் பயிற்சி பள்ளி மைதானத்தில் சிறப்பு கலவரத் தடுப்பு பயிற்சி.

அவிநாசி சாலையில் உள்ள காவலர் பயிற்சி பள்ளி மைதானத்தில் (PRS grounds) கோவை மாநகர ஆயுதப்படை, சட்டம் மற்றும் ஒழுங்கு காவல் நிலையங்களில் பணியாற்றும் காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளிநர்களுக்கான கலவரத் தடுப்பு, கவாத்து பயிற்சி அளிக்கப்பட்டது.


கோவை: கோவை அவிநாசி சாலையில் உள்ள காவலர் பயிற்சி பள்ளி மைதானத்தில் (PRS grounds) மாநகர ஆயுதப்படை மற்றும் சட்டம் மற்றும் ஒழுங்கு போலீசாருக்கு கலவரத் தடுப்பு பயிற்சி நடைபெற்றது.



கோவை மாநகர ஆயுதப்படை, சட்டம் மற்றும் ஒழுங்கு காவல் நிலையங்களில் பணியாற்றும் காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளிநர்களுக்கான கலவரத் தடுப்பு, கவாத்து பயிற்சிஅவிநாசி சாலையில் உள்ள காவலர் பயிற்சி பள்ளி மைதானத்தில் நடைபெற்றது.



இந்த பயிற்சியின்போது, கலவரத்தில் ஈடுபடுபவர்களை எப்படி தடுப்பது, கலைப்பது போன்ற மாதிரி செய்முறைகள் செய்து காண்பிக்கப்பட்டது.

மேலும், ஒலிபெருக்கி, தண்ணீர் புகை, லத்தி மற்றும் துப்பாக்கியைக் கொண்டு கலவரத்தை கட்டுப்படுத்துதல் தொடர்பான பயிற்சிகளும் அளிக்கப்பட்டது.

இதில், போலீசார் கலவரக்காரரை துப்பாக்கியில் சுடுவது போன்றும், பின்னர் காயமடைந்த அவரை போலீஸ் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வது போன்றும் பயிற்சிகள் எடுக்கப்பட்டது.

இந்த பயிற்சியில், காவல்ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் உட்பட மொத்தம் காவலர்கள் 196 பேர் பயிற்சி பெற்றனர்.



Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...