திருப்பூர் பழைய பேருந்து நிலையத்திற்கு கலைஞர் கருணாநிதி பெயரை வைக்க மாமன்ற கூட்டத்தில் இன்று தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நிலையில், தீர்மானத்தை எதிர்த்து அதிமுக மற்றும் பாஜகவினர் அமளியில் ஈடுபட்டு வெளிநடப்பு செய்தனர்.
திருப்பூர்: திருப்பூர் மாநகராட்சியில் அமைந்துள்ள பழைய பேருந்து நிலையம் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் புனரமைக்கப்பட்டு கட்டுமான பணிகள் நிறைவடைந்துள்ளது. இன்னும் சில பணிகள் மட்டுமே பாக்கி இருக்கும் நிலையில், விரைவில் இந்தபேருந்து நிலையத்தை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரும் பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் பழைய பேருந்து நிலையத்திற்கு மறைந்த முதலமைச்சர்கருணாநிதியின் பெயரை வைக்கும் விதமாக, "கலைஞர் கருணாநிதி மத்திய பேருந்து நிலையம்" என பெயர் வைக்க திருப்பூர் மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம் முன்வைக்கப்பட்டது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அதிமுக மற்றும் பாஜக உறுப்பினர்கள் தியாகி திருப்பூர் குமரன் பெயரை பழைய பேருந்து நிலையத்திற்கு வைக்க வேண்டும் என தெரிவித்தனர். மேலும் அதிமுக ஆட்சி காலத்தில் உருவாக்கப்பட்ட திட்டத்திற்கு தியாகி திருப்பூர் குமரன் சிலை வைப்பது தான் பொருத்தமாக இருக்கும் எனவும் தெரிவித்தனர்.
இதற்கு பதிலளித்து பேசிய மேயர் தினேஷ்குமார் திமுக ஆட்சி காலத்தில் துவங்கப்பட்ட பல திட்டங்களுக்கு புரட்சித்தலைவர் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா பெயர்கள் சூட்டப்பட்டு இருக்கிறது. எனவே இதுகுறித்து பேச அதிமுகவினருக்கு தார்மீக உரிமை இல்லை எனவும் தீர்மானம் பெரும்பான்மையான மாமன்றஉறுப்பினர்களின் ஆதரவுடன் நிறைவேற்றப்படுவதாக தெரிவித்தார்.

திமுக - அதிமுக என இரண்டு கட்சியைச் சேர்ந்த மாமன்ற உறுப்பினர்களும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் மாமன்ற கூட்ட அரங்கில் கடும் அமளி நிலவியது.
இதனை தொடர்ந்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக மேயர் அறிவித்த உடன் அதிமுக மற்றும் பாஜக உறுப்பினர்கள் மாமன்ற கூட்டத்தை விட்டு வெளிநடப்பு செய்தனர்.