தனிப்படை முன் ஆஜரான டிடிவி தினகரனின் நெருங்கிய நண்பரும் வழக்கறிஞருமான நாமக்கல் செந்திலிடம், போலீசார் கொடநாடு வழக்கு குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை: தமிழ்நாட்டில் நடந்த கொலை, கொள்ளை வழக்குகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது கொடநாடு கொலை, கொள்ளை சம்பவம் என்றால் அது மிகை ஆகாது.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உயிருடன் இருந்த வரை பகலில் கூட யாரும் செல்ல முடியாத கொடநாடு எஸ்டேட்டில்ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் நீலகிரி மாவட்டம் கோடநாடு பங்களாவில் கொலை மற்றும் கொள்ளை சம்பவம் அரங்கேறின.
கடந்த 2017 ஆம் ஆண்டு இந்த சம்பவம் அரசியல் வட்டாரத்தில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தின. ஏராளமான ஆவணங்கள்,தங்க நகைகள் என பலகோடி மதிப்பிலான பொருட்கள் கொள்ளை அடிக்கப்பட்டதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகின.
இதுதொடர்பாக ஐ ஜி சுதாகர் தலைமையிலான தனிப்படை போலிசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதுவரைகுற்றம் சாட்டப்பட்டவர்கள், அரசுத்தரப்பு சாட்சியங்கள் என சுமார் 225 நபர்களிடமவிசாரணை நடைபெற்றுள்ளது.
கடந்தாண்டு அக்டோபர் மாதம் இந்த வழக்கில் சாட்சியங்களை மறைத்ததாக முக்கிய குற்றவாளியாக கருதப்படும் சேலத்தில் விபத்தில் உயிரிழந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கார் ஓட்டுனரான கனகராஜின் சகோதரர் தனபால், அவருடைய உறவினர் ரமேஷ் ஆகிய இருவரை கூடுதலாக தனிப்படை காவல்துறையினர் கைது செய்தனர்.
தற்போது இந்த வழக்கு சம்பந்தமான விசாரணை உதகையில் நடைபெறாமல்கோவையில் நடைபெற்று வருகிறது. கோவை பி.ஆர்.எஸ் கிரவுண்டில் உள்ள அலுவலகத்தில் தனிப்படை போலீசார் முன் ஆஜராக சசிகலாவின் குடும்ப நண்பரும் டிடிவி தினகரனின் நெருங்கிய நண்பருமான நாமக்கல் வழக்கறிஞர் செந்திலுக்கு போலிசார் சம்மன் அனுப்பினர்.
இதனை தொடர்ந்து வழக்கறிஞர் செந்தில் தனிப்படை முன் ஆஜராகியுள்ளார். அவரிடம்தனிப்படைபோலீசார்விசாரணையை தொடங்கியுள்ளனர்.
யார் இந்த நாமக்கல் செந்தில்?
டிடிவி தினகரனின் நண்பர் தான் இந்த நாமக்கல் செந்தில். சசிகலாவின் குடும்பத்திற்கு மிகவும் நெருக்கமானவர் என்றும் கூறப்படுகிறது.
இதன் காரணமாகவே, ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா வீட்டில் நடந்த சோதனை நடந்த போது நாமக்கல் செந்தில் வீட்டிலும் சோதனைநடத்தப்பட்டது.
நாமக்கல்லை சேர்ந்த செந்தில் தற்போது சென்னையில் வசித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.