வெள்ளலூர் பேருந்து நிலையத்தை இடமாற்றம் செய்ய கூடாது எனவும் அப்பணிகளை கைவிட கூடாது என வலியுறுத்தி அதிமுக கவுன்சிலர்கள் பிரபாகரன் மற்றும் ரமேஷ் ஆகியோர் கண்டன பதாகைகளை ஏந்தி விக்டோரியா ஹால் முன்பு கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
கோவை: கோவை மாநகராட்சி விக்டோரியா ஹாலில் மேயர் கல்பனா ஆனந்தகுமார் தலைமையில் மாமன்ற கூட்டம் இன்று நடைபெற்று வருகிறது. இதில், மாமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டு அவர்களது கோரிக்கைகளை முன்வைத்தனர்.

சமீபத்தில், கோவையில் கட்டுப்பட்டு வரும் வெள்ளலூர் பேருந்து நிலையம் இடமாற்றம் செய்யப்படுவதாக தகவல்கள் வெளியான நிலையில், மாமன்ற கூட்டம் மற்றும் பொதுமக்கள் கருத்துக்கேற்ப அது முடிவு செய்யப்படும் என அமைச்சர் செந்தில் பாலாஜி பேட்டியளித்திருந்தார்.

எனவே, இன்று நடைபெறும் கூட்டத்தில் வெள்ளலூர் பேருந்து நிலைய இடமாற்றம் குறித்து ஏதேனும் தீர்மானமோ அல்லது தகவல்களோ வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், வெள்ளலூர் பேருந்து நிலையத்தை இடமாற்றம் செய்ய கூடாது எனவும் அப்பணிகளை கைவிட கூடாது என வலியுறுத்தி அதிமுக கவுன்சிலர்கள் பிரபாகரன் மற்றும் ரமேஷ் ஆகியோர் கண்டன பதாகைகளை ஏந்தி விக்டோரியா ஹால் முன்பு கண்டன முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர், மாமன்ற கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

இது குறித்து பேசிய அவர்கள், எதனால் இப்பணிகள் கைவிடப்படுகிறது என கேள்வி எழுப்பினர். பேருந்து நிலையம் மாற்றப்பட்டதால், மக்களின் வரிப்பணம் வீணக்கப்படும் என தெரிவித்தனர். மேலும், கோவை மாநகராட்சி பகுதியில் பழுதடைந்த சாலைகளை சீரமைக்க 200 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார் என கூறிய அவர்கள் அப்பணம் எங்கே எனவும் உடனடியாக பழுதடைந்த சாலைகளை சீரமைக்க வேண்டுமென கோரிக்கை வைத்தனர்.