வால்பாறை அருகே கர்ப்பிணி காட்டு யானை உயிரிழப்பு; குட்டியும் இறந்த சோகம்.

தாய்முடி எஸ்டேட் மத்திய பிரிவு 7-ம் நம்பர் தேயிலை தோட்டத்தையொட்டி சேறும் சகதியுமான பகுதியில் 25 வயது கர்ப்பிணி யானை ஒன்று இறந்து கிடந்துள்ளது. பிரசவத்தின் போது வலியால் யானை இறந்துள்ளது என்றும் இறந்த குட்டி பெண் என்பதும் தெரியவந்துள்ளது.


வால்பாறை: கோவை மாவட்டம் ஆனைமலை புலிகள் காப்பகம் வால்பாறை சுற்றியுள்ள சோலையார் அணை, உருளிகல், சின்கோனா, சின்ன கல்லார், பெரிய கல்லார் பகுதிகளில் காட்டு யானைக் கூட்டங்கள் அதிக அளவில் நடமாடும் பகுதிகளாகும்.

எஸ்டேட் தேயிலை தொழிலாளர்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதிக்கு யானைகள் வராமல் தடுக்கும் விதமாக, ரோந்து மற்றும் பல்வேறு கட்ட நடவடிக்கைகளை வனத்துறையினர் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள்மேற்கொண்டு வருகின்றனர்.

அதன்படி, நேற்றுதாய்முடி எஸ்டேட் பகுதியில் பெண் காட்டு யானை ஒன்று கடந்த மூன்று நாட்களாக நடமாடி வருவதை அறிந்த வனத்துறையினர், அப்பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.

இந்த நிலையில், தாய்முடி எஸ்டேட் மத்திய பிரிவு 7-ம் நம்பர் தேயிலை தோட்டத்தையொட்டி சேறும் சகதியுமான பகுதியில் தாய் யானை மற்றும் குட்டி யானை ஒன்று இறந்து கிடப்பதாக,வனத்துறையினருக்கு தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள் தகவல் அளித்தனர்.



தகவலின் பேரில், மானாம்பள்ளி வனச்சரகர் மணிகண்டன் தலைமையில் வனத்துறையினர் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.



விசாரணையில் பெண் காட்டு யானை குட்டியை ஈன்றெடுக்கும் பொழுது உயிரிழந்துள்ளது தெரியவந்தது.பின்னர், ஆனைமலை புலிகள் காப்பக கள இயக்குனர் அறிவுறுத்தல்படி, துணை கள இயக்குனர், செல்வம் மற்றும்கால்நடை மருத்துவர் விஜயராகவன்மானாம்பள்ளி வன சரகர் மணிகண்டன் ஆகியோர்சம்பவ இடத்திற்கு வந்து காட்டு யானையை ஆய்வு செய்தனர்.



கால்நடை மருத்துவர்கள் மற்றும் வனத்துறை ஊழியர்கள் இறந்த யானைக்குபிரேத பரிசோதனை செய்து வருகின்றனர். பிரேத பரிசோதனை முடிவில் தான், யானை இறந்தற்கான சரியான காரணம் தெரிய வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இறந்த பெண் காட்டு யானைக்கு சுமார் 25 வயது இருக்கும் எனவும் பிரசவத்தின் போது பிரசவ வலியால் இறந்தது தெரியவந்தது. மேலும், இறந்த குட்டி பெண் என்பதும் தெரியவந்துள்ளது.

தாய் மற்றும் குட்டி யானைகளை பிரேத பரிசோதனை செய்து அதே பகுதியில் வனத்துறையினர் புதைத்தனர்.

பிரசவத்தின் போது பெண் யானை மற்றும் அதன் குட்டி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...