கோவை மத்திய சிறையில் போக்ஸோ கைதி உயிரிழப்பு.

குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் தண்டனை அனுபவித்து வந்த குருசாமிக்கு ,இன்று திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், மாரடைப்பு காரணமாக அவர் இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.


கோவை: ஈரோடு மாவட்டம் அந்தியூர் குப்பாண்டம்பாளையத்தை சேர்ந்தவர் குருசாமி (44). கடந்த மார்ச் மாதம் 5 ஆம் தேதி, போக்ஸோ வழக்கில் பவானி அனைத்து மகளிர் போலீசார் இவரை கைது செய்தனர்.

பின்னர், கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்ட அவர்,குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். இந்நிலையில், சிறையில் இருந்த குருசாமிக்குதிடீரென இன்றுஉடல்நலக்குறைவு ஏற்பட்டது.

இதையடுத்து, அவரை சிறைத்துறை காவலர்கள் மீட்டு சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் வரும் வழியிலேயே மாரடைப்பு காரணமாக இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இது குறித்து பந்தைய சாலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...