பல்லடம் அருகே எம். ஊத்துக்குளி பகுதியில் வீட்டில் தனியே இருந்த திருமணமான அசாம் மாநிலத்தைச் சேர்ந்த பெண்ணை, அதே மாநிலத்தை சேர்ந்த மூவர் வீடு புகுந்து பாலியல் தொந்தரவு கொடுத்த சம்பவத்தில், மூவரையும் கைது செய்த மகளிர் போலீசார், அவர்களை சிறையில் அடைத்தனர்.
திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே எம். ஊத்துக்குளி பகுதியில் உள்ள பிரபல டைல்ஸ் தயாரிப்பு நிறுவனத்தில், அசாம் மாநிலத்தைச் சேர்ந்த திரிபுல் இஸ்லாம் என்பவர்,வேலை செய்து வருகிறார். கடந்த 10 நாட்களுக்கு மேலாக, அவர்தனது 21வயது மனைவியுடன் அவர் பணிபுரியும் நிறுவன வளாகத்தில் உள்ள வீட்டில் தங்கி வந்தார்.
இந்நிலையில், நேற்று இரவு திரிபுல் இஸ்லாம் வேலைக்கு சென்று விட்ட நிலையில், அந்நிறுவனத்தின் வளாகத்தில் உள்ள வீட்டில் அவரது மனைவி மட்டும் தனியே இருந்துள்ளார். அப்போது, அதே நிறுவனத்தில் வேலை செய்து வரும் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்களான அமருள் இஸ்லாம், அனீப் அலி, இப்ராஹிம் அலி ஆகிய மூவர், அந்த வீட்டுக்குள் புகுந்து தனியே இருந்த பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளனர்.
இதையடுத்து, அப்பெண் சத்தம் போட்டதால்,அவர்கள் மூவரும்அங்கிருந்து தப்பி ஓடியதாக கூறப்படுகிறது. சம்பவம் குறித்து, சக தொழிலாளர்கள் பல்லடம் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலின் பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மகளிர் காவல் ஆய்வாளர் பர்வீன் பானு தலைமையிலான போலீசார், அப்பெண்ணை மீட்டு பரிசோதனை மற்றும் சிகிச்சைக்காக பல்லடம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
பின்னர், அங்கு மருத்துவர்கள் அப்பெண்ணுக்கு முதலுதவி சிகிச்சையும் பரிசோதனையும் செய்தனர்.
அதனைத் தொடர்ந்து, அப்பெண்ணின் வாக்குமூலத்தின் பேரில், வழக்குப் பதிவு செய்த மகளிர் போலீசார், வீட்டில் தனியே இருந்த அசாம் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த அமருள் இஸ்லாம், அனீப் அலி, இப்ராஹிம் அலி ஆகிய மூவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
பல்லடம் அருகே வீட்டில் தனியே இருந்த திருமணம் ஆன வெளிமாநில பெண் ஒருவருக்கு நேர்ந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.