திருப்பூர் - அவிநாசி சாலையை ஆக்கிரமித்து கடைகள் அமைக்கப்பட்டிருந்த நிலையில், மாநகராட்சி மற்றும் நெடுஞ்சாலை துறை அதிகாரிகள், ஜே.சி.பி இயந்திரத்தை கொண்டு, ஆக்கிரமிப்புகளை அகற்றினர்.
திருப்பூர்: திருப்பூர் - அவிநாசி சாலையில் கடைகள் முன்பு ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு இருந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனிடையே ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற வேண்டுமென மாநகராட்சி, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் தொடர்ந்து கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில், விதிகளை மீறி போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுமாறு கடையின் உரிமையாளர்களுக்கு ஒரு வாரத்திற்கு முன் நோட்டீஸ் வழங்கப்பட்டது. இருப்பினும், வியாபாரிகள் பலரும் ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் இருந்ததாக கூறப்படுகிறது.

இதனை தொடர்ந்து இன்று திருப்பூர் - அவிநாசி சாலையில் போக்குவரத்துக்கு இடைஞ்சலாக உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி நடைபெற்றது.

நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள், மாநகராட்சி அதிகாரிகள் முன்னிலையில் ஜே.சி.பி இயந்திரம் மூலம் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

இதனால் திருப்பூர் -அவிநாசி சாலையில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.