பாதாள சாக்கடை திட்ட பணியாளர்கள் பணி முடிந்து குளிக்க, ஓய்வெடுக்க, உணவு உண்ண, விளையாடும் வகையில் அமைக்கப்பட்டுள்ள மகிழ் புத்துணர்வு மையத்தை மேயர் கல்பனா ஆனந்தகுமார், ஆணையாளர் பிரதாப் திறந்து வைத்தனர்.
கோவை: கோவை மாநகராட்சியில் பாதாளச் சாக்கடை திட்டப் பணிகளில் ஈடுபடும் ஊழியர்கள் பணி முடிந்து வந்து குளித்து ஓய்வெடுக்கவும், சதுரங்கள் போன்ற விளையாட்டுகளை விளையாடி மன ரீதியாக புத்துணர்வு பெறும் வகையில் புத்துணர்வு மையம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்திற்கு உட்பட்ட 72 ஆவது வார்டு, மேற்கு ஆரோக்கியசாமி சாலையில் உள்ள மாநகராட்சி கட்டிடத்தில் இந்த “பணி செய்து மகிழ் புத்துணர்வு மையம்” அமைக்கப்பட்டு உள்ளது.

இந்த மையத்தை மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்தகுமார், ஆணையாளர் பிரதாப் ஆகியோர் திறந்து வைத்தனர். தமிழகத்தில் முதன் முதலாக பாதாள சாக்கடைத் திட்ட பணியாளர்களுக்கு குளியலறை, ஓய்வறை, கழிவறை குடிநீர் வசதி மற்றும் உணவருந்தும் கூடம், விளையாட்டு வசதிகள் ஆகியவை ஏற்படுத்தப்பட்டுள்ளது.

துவக்க நாளான இன்று, போதை மற்றும் மதுவிற்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. இதில் பணியாளர்கள் மற்றும் அதிகாரிகள் உடல் பரிசோதனை செய்து கொண்டனர்.