பொள்ளாச்சி அருகே 17 வயது சிறுமியை திருமணம் செய்த 19 வயது இளைஞர் போக்சோவில் கைது

பொள்ளாச்சி சொக்கனூர் அருகே 17 வயது சிறுமியை திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கி, திருமணம் செய்து கொண்ட 19 வயது இளைஞரை போலீசார் போக்சோவில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


கோவை: பொள்ளாச்சி அருகேயுள்ள சொக்கனூரை சேர்ந்தவர் 19 வயது கூலித்தொழிலாளி இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த +2 படிக்கும் 17 வயது சிறுமிக்கும் சில ஆண்டுகளாக பழக்கம் இருந்து வந்துள்ளது.

நாளடைவில் இருவருக்குமான நட்பு காதலாக மாறிய நிலையில், 4 ஆண்டுகளாக இருவரும் அடிக்கடி சந்தித்தும், செல்போனில் பேசியும் தங்களது காதலை வளர்த்து வந்துள்ளனர்.

இந்நிலையில், கடந்த மே மாதம் 20ஆம் தேதி சிறுமியின் பெற்றோர் இல்லாத நேரத்தில் அவரது வீட்டுக்கு சென்ற அந்த இளைஞர், அந்த சிறுமியை திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.

இதனால், கர்ப்பமான மாணவி, இதுகுறித்து காதலனிடம் தெரிவித்துள்ளார். இதனையடுத்து கடந்த 21ஆம் தேதி சிறுமியை கிணத்துக்கடவு பகுதிக்கு அழைத்துச் சென்ற அந்த இளைஞர், பெற்றோருக்கு தெரியாமல் கோவிலில் வைத்து அவரை திருமணம் செய்து கொண்டுள்ளார்.

பின்னர், சிறுமியை தனது வீட்டிற்கு அழைத்து சென்ற நிலையில் இருவரும் கணவன் - மனைவியாக வாழ்ந்து வந்துள்ளனர். இதனையறிந்த, அக்கம் பக்கத்தினர் இதுகுறித்து குழந்தைகள் நல பாதுகாப்பு அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.

இதனடிப்படையில், உடனடியாக அப்பகுதிக்கு விரைந்து சென்று விசாரணை நடத்திய அதிகாரிகள் சிறுமியை மீட்டு, பொள்ளாச்சி அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.

புகாரின் பேரில், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார், இளைஞரை கைது செய்தனர். இதனையடுத்து, அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...