வரும் 31 ஆம் தேதி கொண்டாடப்பட உள்ள விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பாக பல்வேறு அளவுகளில் நவதானிய விநாயகர் சிலைகள் பல்வேறு அளவுகளில் விற்பனைக்கு தயாராகி வருகிறது.
கோவை: வரும் 31ஆம் நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட உள்ளது. இதனையொட்டி கோவை மாவட்டத்தில் சுற்றுச்சூழல், மற்றும் நீர்நிலைகளை பாதிக்காத வண்ணம் விநாயகர் சிலைகளை உருவாக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பாக பாரம்பரிய மண்பாண்ட கலைஞர்களால் செய்யப்பட்ட நவதானியங்கள் அடங்கிய விநாயகர் சிலைகள் பல்வேறு அளவுகளில் விற்பனைக்கு தயாராகி வருகிறது.
இது குறித்து பேசிய கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பின் ஒருங்கிணைப்பாளர், ரா. மணிகண்டன் கூறுகையில், கடந்த வருடம் நவதானிய விநாயகர் சிலைகள் நீர்நிலைகளில் உள்ள பல்லுயிர்களுக்கு உணவாகவும், சுற்றுச்சூழலை காக்கும் வகையில் அமைந்தது.
எனவே, இவ்வாண்டும் பண்டிகையை பாதுகாப்பாகவும், பசுமையாகவும் கொண்டாடும் நோக்கோடு விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்தை ஊக்குவிக்கும் வகையில் நவதானிய விநாயகர் சிலைகளை தயாரித்து வருகிறோம், என்றார்.
வீடுகளில் வைக்க சிறிய அளவிலான விநாயகர் சிலைகள், அலுவலங்களில் பொது இடங்களில் வைக்க பெரிய அளவிலான சிலைகள் என பல்வேறு அளவுகளில் இந்த சிலைகள் கிடைக்கும்.
அளவுகள்
8 இன்ச் அளவிலான சிலை - ரூ.100க்கு விற்பனை
12 இன்ச் அளவிலான சிலை - ரூ.200க்கு விற்பனை
18 இன்ச் அளவிலான சிலை - ரூ.400க்கு விற்பனை
24 இன்ச் அளவிலான சிலை - ரூ.500க்கு விற்பனை
தொடர்புக்கு: 95667 37318, 98948 26194.
சுந்தராபுரம் – 95667 37318
ராமநாதபுரம் -98421 96822.