வால்பாறை நகராட்சி தூய்மை பணியாளர்களுக்கான மருத்துவ பரிசோதனை மற்றும் ஆலோசனை முகாம்

வால்பாறையில் நடைபெற்ற இந்த முகாமில் கலந்து கொண்ட 50க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்களுக்கு ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை போன்ற பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, ஆயுள் காப்பீடு, விபத்து காப்பீடு உள்ளிட்டவை குறித்து ஆலோசனை வழங்கப்பட்டது.


கோவை: வால்பாறை நகராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கான சிறப்பு மருத்துவப் பரிசோதனை முகாம் மற்றும் ஆலோசனை மூலம் நடைபெற்றது.



இதில் வால்பாறை பகுதியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்கள் சுமார் 50 பேர் கலந்து கொண்டனர் அவர்களுக்கு ஆரம்ப சுகாதார நிலைய செவிலியர்கள் மற்றும் மக்களைத்தேடி மருத்துவ தன்னார்வலர்கள் மூலம் ரத்த அழுத்தம், சர்க்கரை உள்ளிட்ட பரிசோதனை செய்த பின்னர் சிகிச்சை அளிக்கப்பட்டது.



இந்த நிகழ்வில் வால்பாறை ஸ்டேட் வங்கி கிளை மேலாளர் பாலசுப்ரமணியம் கலந்து கொண்டு தூய்மை பணியாளர்களுக்கு விபத்துக் காப்பீடு, ஆயுள் காப்பீடு மற்றும் பென்சன் திட்டங்கள் குறித்து விரிவாக எடுத்துரைத்தார்.



அப்போது பேசிய அவர், பாரத ஸ்டேட் வங்கியில் கணக்கு உள்ள 18 வயது முதல் 70 வயது உள்ளவர்கள் வருடம் 20 ரூபாய் வங்கி கணக்கில் செலுத்தி வந்தால், ரூ.2லட்சம் மதிப்பில் விபத்து காப்பீடு பெறலாம்.

மேலும், வருடம் 436 ரூபாய் செலுத்தினால் ஆயுள் காப்பீடு பெறலாம். இதேபோல், மாதம் ரூ.5,000 ஓய்வு ஊதியம் பெறும் திட்டமும் உள்ளது என்பது உள்ளிட்ட பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார். அனைவரும் இந்த திட்டங்களில் சேர்ந்து பயனடைய வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

இந்த நிகழ்வில் நகர்மன்ற தலைவர் அழகுசுந்தரவள்ளி செல்வம் மற்றும் நகராட்சி ஆணையாளர் பாலு, நகராட்சி பொறியாளர் வெங்கடாசலம், மேலாளர் ஜலாலுதீன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...