கோவையில் விடிய விடிய பெய்த கனமழை - லங்கா கார்னர் உள்ளிட்ட முக்கிய சுரங்க பாதைகள் நீரில் மூழ்கியதால் போக்குவரத்து நிறுத்தம்.

லங்கா கார்னர் உள்ளிட்ட பல்வேறு சுரங்கப்பாதைகளில் தேங்கியுள்ள நீரை மோட்டார்கள் மூலம் அகற்றும் பணிகளை துரிதப்படுத்த மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் ஆய்வின் போது உத்தரவிட்டார்.



கோவை: கோவை மாவட்டத்தில் நேற்று நள்ளிரவு 12 மணியளவில் இடி மின்னலுடன் பலத்த மழை பெய்தது. சுமார் 3 மணி நேரம் நீடித்த தொடர் மழையால், அவினாசி சாலை, திருச்சி சாலை, சுந்தராபுரம், உக்கடம் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் அனைத்து சாலைகளில் நீர் பெருக்கெடுத்து ஓடியது.



கனமழை காரணமாக ரயில்வே நிலையம் அருகே உள்ள லங்கா கார்னர், கிக்கானி பள்ளி, அவினாசி சாலை உள்ளிட்ட முக்கிய சுரங்கப்பாதைகள் நீரில் மூழ்கியது. இதனால், அப்பகுதிகளில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.



மேலும், லங்கா கார்னர் சுரங்கப்பாதையில் அதிகாலையில்கார் ஒன்று சிக்கிக் கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த மாநகராட்சி ஊழியர்கள் உடனடியாக அந்த காரை வெளியே எடுத்தனர்.



இதையடுத்து, மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் மற்றும் துணை ஆணையாளர் சர்மிளா ஆகியோர் கிக்கானி, லங்கா கார்னர் பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர். மேலும் சுரங்கப்பாதையில் தேங்கிய நீரை மோட்டார்கள் மூலம் அகற்றும் பணிகளை மேற்கொள்ள உத்தரவிட்டனர்.



இதையடுத்து ராட்சதமோட்டார்கள் மூலம் சுரங்க பாதையில் இருந்த நீரை வெளியேற்றும் பணிகளில் மாநகராட்சி அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.



மழை நீர் சூழுந்துள்ள பகுதிகள் கோவையின் மைய பகுதிகள் என்பதால் மக்கள் பெரும் அவதிகுள்ளகினர். வடகிழக்கு பருவ மழை தொடங்கும் முன்பாவது, இப்பகுதிகளில் உள்ள மழை நீர் வடிகால்களை தூர்வாரி மழை நீர் அதிக நேரம் தேங்காத படிநடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.



Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...