கோவையில் மாமியார் மற்றும் மனைவியின் சகோதரி பெயரில் சொத்துக்களை வாங்கியதாக பத்திரப்பதிவுத்துறை அதிகாரி செல்வகுமார் மீது கோவை லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.
கோவை: கோவை மாவட்ட பத்திரப்பதிவுத்துறையில் நீண்ட காலமாக பணியாற்றி வந்தவர் செல்வக்குமார் (46). சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த இவர், கடைசியாக கோவை மாவட்ட பதிவாளராக (தணிக்கை) பிரிவில் பணியாற்றினார். இவர் மீது துறை ரீதியான புகார்கள் மற்றும் குற்றச்சாட்டுகள் எழுந்தத நிலையில், தற்போது அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
செல்வக்குமாரின் மாமியார் பாண்டியம்மாள், ஓய்வூதியம் பெறுபவர். செல்வக்குமாரின் மனைவி முகிலின், சகோதரி தென்றல், காரைக்குடியில் தனியார் பள்ளி ஆசிரியையாக பணியாற்றி வருகிறார்.
செல்வக்குமார், கோவை மாவட்டம் விளாங்குறிச்சி ஸ்ரீ வராகமூர்த்தி அவென்யூவில் மனைவியின் சகோதரியான தென்றலின் பெயரில் ஆடம்பர பங்களா கட்டியுள்ளார். 2009 ஆம் ஆண்டு ஜன.,1 முதல் 2012ம் ஆண்டு டிச.,31 வரை, தன் மாமியார் பாண்டியம்மாள் பெயரிலும், மனைவியின் சகோதரி தென்றல் பெயரிலும் சொத்துக்களை வாங்கியுள்ளார்.
பாண்டியம்மாள், தென்றல் ஆகியோரது சொத்துக்களின் மதிப்பு, 2009 ஜன.,1ல் வெறும் 11 லட்சத்து 46 ஆயிரம் ரூபாயாக இருந்த நிலையில், 2012 டிச.,31ல் 89 லட்சத்து 82 ஆயிரம் ரூபாயாக அவர்களது சொத்து மதிப்பு அதிகரித்துள்ளது.
இந்த காலத்தில் அவர்களது வெளிப்படையான வருவாய் ஆதாரங்களின் மூலம் 27 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் மட்டுமே வருவாய் கிடைத்திருக்க முடியும். ஆனால், வருவாய்க்கு அதிகமாக 65 லட்சத்து 87 ஆயிரம் ரூபாய் மதிப்புடைய சொத்துக்கள் அவர்கள் பெயரில் குவிக்கப்பட்டுள்ளன.
இதன் மூலம் செல்வக்குமார், அவரது மாமியார் பாண்டியம்மாள், மனைவியின் சகோதரி தென்றல் ஆகியோர், உண்மையான வருவாய் ஆதாரத்தை காட்டிலும், 242 சதவீதம் அதிகமாக சொத்துக்களை வாங்கியுள்ளனர் என்பது லஞ்ச ஒழிப்பு போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதையடுத்து, லஞ்ச ஒழிப்பு சட்டங்களின் அடிப்படையில், மாவட்ட பதிவாளர் செல்வக்குமார், அவரது மாமியார், மனைவியின் சகோதரி ஆகியோர் மீது கோவை லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.
யார் இந்த செல்வக்குமார்..?
மாவட்ட பதிவாளர் செல்வக்குமார், முந்தைய அ.தி.மு.க., ஆட்சிக்காலத்தில் பத்திரப்பதிவுத்துறையில் சர்வ வல்லமையுடன் வலம் வந்தவர்.
இவர் பணியாற்றிய, 19 ஆண்டுகளும் கோவை மாவட்டத்தில் தான் பணியில் இருந்துள்ளார். அமைச்சர்கள், மாஜி அமைச்சர்கள், உயர் அதிகாரிகள் என வி.ஐ.பி.,க்கள் பலரும் பத்திரப்பதிவு செய்வது என்றால் செல்வக்குமாரை தான் தொடர்பு கொள்வர்.
அப்படி பத்திரப்பதிவு செய்த வகையில் தான், அ.தி.மு.க., வி.ஐ.பி.,க்கள் பலரும், அவரது நட்பு வளையத்தில் வந்தனர். தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட நிலையில், அவர் மீதான புகார்களில் விசாரணை சூடு பிடித்தது. இப்போது லஞ்ச ஒழிப்பு போலீசாரும் வழக்கு பதிந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.