வடமாநில சிறுமி கடத்தப்பட்ட சம்பவத்தில் முக்கிய திருப்பம்: 14 வயது சிறுவனால் கடத்தப்பட்டதாக தகவல் - கோவை இரயில் நிலையத்தில் போலீசார் தீவிர கண்காணிப்பு

சிறுமி படிக்கும் அதே பள்ளியில் படிக்கும் 14 வயது சிறுவன், சிறுமியை கடத்தியது தெரியவந்துள்ளது. சிறுவனுக்கு போதை பழக்கம் இருப்பதாகவும், கோவையில் உள்ள சிறுவனின் நண்பனை தொடர்பு கொண்டு உதவி கேட்டதால், கோவை போலீசார் விசாரணை.



கோவை: வடமாநிலத்தை சேர்ந்த ஒருவர் தனது டுவிட்டர் பக்கத்தில், தனது 12 வயது மகளை சிலர் கடத்திச் சென்று விட்டதாகவும், அவர்கள் இன்று இரவு அல்லது நாளைய தினம் கோவை ரயில் நிலையத்திற்கு வருவார்கள் என தொலைபேசியில் தெரிவித்ததாக குறிப்பிட்டிருந்தார்.

மேலும், அந்த பதிவில் தனது மகளின் புகைப்படத்தையும், கடத்தல் குறித்து காவல்நிலையத்தில் அளித்த புகாரின் முதல் தகவல் அறிக்கையின் (FIR) நகலையும் இணைத்து, தமிழக காவல்துறையையும், ரயில்வே காவல்துறையையும் டேக் (Tag) செய்து உதவி கோரியிருந்தார்.

இதனையடுத்து, குற்றவாளிகளை பிடிக்க கோவை நகர காவல்துறைக்கும், ரயில்வே போலீசாருக்கும் அலர்ட் கொடுத்துள்ளதாக தமிழக காவல்துறை, தெரிவித்திருந்தது. இதனை தொடர்ந்து மாவட்ட காவல்துறை மற்றும் ரயில்வே காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருவதாக தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில், திடீர் திருப்பமாக, உத்தரப்பிரதேசத்தில் லக்னோ பள்ளியில் பயின்று வரும் 12 வயது சிறுமி, 14 வயது சிறுவனால் கடத்தப்பட்டதாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையிலேயே கடத்தல் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிறுமியின் பள்ளி புத்தகப்பை குப்பை தொட்டியில் இருந்ததாக போலீசார் சிறுமியின் தந்தையிடம் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து, சிறுமியின் தந்தை சிறுமி படிக்கும் பள்ளிக்கு சென்று கேட்டபோது, சிறுமி பள்ளிக்கே வரவில்லை என்று பள்ளி நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.



பள்ளியின் வெளிப்புறத்தில் உள்ள சிசிடிவி பதிவை ஆய்வு செய்த போது, சிறுவன் ஒருவன், சிறுமியை அழைத்துச் செல்வது பதிவாகியிருந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து தான் சிறுமி கடத்தப்பட்டதாக அவரது தந்தை காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். 

புகாரின் பேரில் சிசிடிவி பதிவுகளை கைபற்றிய போலீசார், சிறுவன் ஒருவன் சிறுமியை அழைத்துச் சென்றதை உறுதி செய்தனர். விசாரணையில், அந்த சிறுமியை அழைத்துச் சென்றது, லக்னோ காவல்துறையில் பணியாற்றும் காவலரின் மகன் என்பதும் தெரியவந்துள்ளது. 

சிறுமி தந்தை அளித்த புகாரின் பேரில் 363, 366 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனையடுத்து, சிறுவனின் தந்தையான காவலரிடமும் போலீசார் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், சிறுமியை கடத்திய சிறுவன் கோவையில் உள்ள நபருக்கு அழைத்து பேசியதை அறிந்த சிறுமியின் தந்தை, தமிழக காவல்துறையின் உதவியை நாடி இருந்தார். 

இந்நிலையில், தமிழக டிஜிபி சைலேந்திர பாபு சிறுமியின் தந்தைக்கு உதவுவதாக டுவிட்டரில் தெரிவித்திருந்தார். இதனிடையே கோவை மாநகர காவல் ஆணையாளர், பாலகிருஷ்ணன் உத்தரவின் அடிப்படையில் 3 தனிப்படைகள், சிறுவன் மற்றும் சிறுமியின் புகைப்படத்தை கொண்டு தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

சிறுவன் கோவையில் உள்ள நண்பனிடம் பேசியிருக்கும் நிலையில், அவரிடமும் விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. 

இந்த நிலையில், உத்திரபிரதேசத்தில் உள்ள சிறுமியின் தந்தை தன் மகள் வெகுளித்தனமானவள் என்றும், அவரை இந்த சிறுவன் கடத்திச் சென்றுவிட்டதாக தெரிவித்திருக்கிறார். மேலும், கடத்தலில் ஈடுபட்ட சிறுவன் பள்ளி பருவத்திலேயே புகைப் பழக்கம், மதுப் பழக்கம், போதைப் பொருள் பழக்கத்துக்கு அடிமையானவன் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

போலீசாரின் விசாரணையில் அடிப்படையிலேயே கோவையை சேர்ந்த நண்பருக்கு அழைப்பு விடுத்து பேசியதை அறிந்ததாகவும், இதன் காரணமாகவே, தமிழக காவல்துறையிடமும், ரயில்வே போலீசாரிடமும் டிவிட்டரில் உதவியை நாடியதாகவும், உதவி செய்ய முன்வந்த தமிழக காவல்துறைக்கு நன்றியையும் தெரிவித்துள்ளார். 

சிறுமியை கடத்திய சிறுவன் தனது வகுப்பில் படிக்கும் கோவையில் இருக்கும் நண்பனுக்கு அழைத்து 3,000 பணம் கேட்டுள்ளதாக தெரிய வந்ததை தொடர்ந்து, அந்த நண்பனிடம் நடத்திய விசாரணையில், ரயில் நிலையம் ஒன்றிலிருந்து செலவுக்கு பணம் இல்லாததனால் பணம் கேட்டு அழைத்ததாக தெரிவித்திருக்கிறார். 

போதைக்கு அடிமையான சிறுவன், சிறுமிக்கும் போதை பொருள் ஏதேனும் கொடுத்து, தன்வசப்படுத்தி ரயிலில் சென்னை அல்லது கோவை மார்க்கமாக புறப்பட்டிருக்கலாம், என சந்தேகிக்கும் போலீசார், அனைத்து ரயில் நிலையங்களிலும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். 

போதை பொருள் என்னவென்றே தெரியாத வயதில், போதை பொருளுக்கு அடிமையான சிறுவன், சிறுமியை கடத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருகின்றன.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...