தமிழ்நாடு கடன் உத்தரவாதத் திட்டம் மூலம் சிறு, குறு நிறுவனங்கள் பிணையில்லா கடன் பெற முடியும் - திருப்பூரில் முதல்வர் அறிவிப்பு

திருப்பூரில் “தோள் கொடுப்போம் தொழில்களுக்கு” என்ற தலைப்பில் சிறு, குறு தொழில்துறை மண்டல மாநாட்டிற்கு தலைமை தாங்கிய முதல்வர், மு.க. ஸ்டாலின், சிறு, குறு நிறுவனங்களின் வளர்ச்சிக்காக ரூ.167.58 கோடி அரசு நிதி உதவியுடன் செயல்படுத்தப்பட இருக்கும் பல திட்டங்களை தொடங்கி வைத்தார்.



திருப்பூர்: திருப்பூரில் “தோள் கொடுப்போம் தொழில்களுக்கு” என்ற தலைப்பில் சிறு, குறு தொழில்துறை மண்டல மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சிறு, குறு நிறுவனங்களின் வளர்ச்சிக்காக ரூ.167.58 கோடி அரசு நிதி உதவியுடன் செயல்படுத்தப்பட இருக்கும் பல திட்டங்களை தொடங்கி வைத்தார்.



இந்த மாநாட்டில், 36 கோடி ருபாய் மதிப்பீட்டில் தமிழ்நாடு கயிறு வணிக மேம்பாட்டு நிறுவனம், 100 கோடி ருபாய் மதிப்பீட்டில் தமிழ்நாடு கடன் உத்தரவாதத் திட்டம், தமிழ்நாடு வர்த்தக வரவுகள் தள்ளுபடி செயல்முறை தளம், 15 கோடி ருபாய் மதிப்பீட்டில் பின்னலாடை குழுமத்திற்கான பொது வசதி மையம் ஆகிய திட்டங்களை துவங்கி வைத்தார்.

இதேபோல், 22 கோடி ருபாய் மதிப்பீட்டில் கோவையில் தொழிலாளர் தங்கும் விடுதி, 42.42 ஏக்கர் பரப்பளவு கொண்ட தனியார் தொழிற்பேட்டை, சேலத்தில் 24.55 கோடி ருபாய் மதிப்பீட்டில் வெள்ளி கொலுசு பொது வசதி மையம் ஆகிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது.



இந்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசும் போது, திருப்பூர் என்பது தொழிலதிபர்கள் வளரும் ஊராக மட்டுமல்லாமல், தொழிலாளி வளரும் ஊராகவும் அமைந்துள்ளது. நேற்றைய தொழிலாளி - இன்றைய முதலாளி. இன்றைய தொழிலாளி, நாளைய முதலாளி என்பது திருப்பூருக்கு பொருத்தமான சொற்கள்.

சிறு, குறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் வளரும் போது சிறு தொழில் முனைவோர் உருவாவார்கள். அதன் மூலம் பல லட்சம் பேருக்கு வேலை கிடைக்கிறது. லட்சக்கணக்கான குடும்பங்கள் வாழ்வு செழிக்கிறது.

பெருந்தொழில்களை மட்டுமே நம்பி இருக்காமல் சிறு, குறு, நடுத்தரத் தொழில்கள் ஊக்கமடைய வேண்டும் என்று தமிழக அரசு விரும்புகிறது. அதிக வேலை வாய்ப்பை உருவாக்குவதில் வேளாண்மை துறைக்கு அடுத்தபடியாக சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை முக்கிய பங்காற்றுகின்றன.

“தோள் கொடுப்போம் தொழில்களுக்கு” என்ற முழக்கத்தோடு MSME நிறுவனங்களின் முக்கிய தேவைகளுக்கு உதவிகள் செய்து வருவதாகவும், இத்தகைய தொழில்கள் சென்னையை - அல்லது குறிப்பிட்ட மாநகரத்தை மையப்படுத்தி மட்டுமே அமைந்துவிடக் கூடாது என்பதிலும் கவனமாக இருக்கிறோம்.

அனைத்து மாவட்டங்களும் சீராக வளர வேண்டும் என்று நினைக்கும் தமிழக அரசானது தென்மாவட்டங்கள், மேற்கு மாவட்டங்களில் இத்தகைய முதலீட்டு மாநாடுகளை நடத்தி வருகிறது. கடந்த 15 மாதத்திற்குள் தமிழ்நாடு அரசு நடத்திய முதலீட்டு மாநாடுகளின் மூலமாக 221 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளது.

இதன் மூலம் 2 லட்சத்து 20 ஆயிரத்து 727 கோடி ரூபாய் அளவிலான முதலீடுகள் ஈர்த்து 3 லட்சத்திற்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகள் உருவாக்கிட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதில் 1,300 கோடி ரூபாய் முதலீடு செய்திட புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ள 49 MSME நிறுவனங்களும் அடங்கும்.

இன்றைய நாள் தமிழ்நாடு கடன் உத்தரவாதத் திட்டம் தொடங்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் சொத்து பிணையில்லா கடன்களை எளிதாகப் பெறலாம். இணையதளம் மூலம் இத்திட்டம் இயங்கும். முதல் கட்டமாக ஆறு வங்கிகளை இணைப்போம், அடுத்த ஆண்டுக்குள் அனைத்து வங்கிகளும் இணைக்கப்படும் என்று உறுதி அளிக்கிறேன்.

தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகத்தின் மூலம் இந்த அரசு பொறுப்பேற்ற பின்பு 2,092 நிறுவனங்களுக்கு 2,113 கோடி ரூபாய்க்கும் அதிகமான கடன் வழங்கப்பட்டுள்ளது. இதில் 99 விழுக்காடு MSME நிறுவனங்களுக்குத்தான் கடன் வழங்கப்பட்டுள்ளது. பெருங்குழுமங்களுக்கான பொது வசதி மையங்கள் தலா 100 கோடி ரூபாய் மதிப்பில் தமிழ்நாடு சிட்கோ மூலம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

புத்தாக்க மற்றும் புத்தொழில் சார்ந்த முன்னெடுப்புகளிலும் தமிழ்நாடு சிறந்து விளங்க வேண்டும் என்ற நோக்கோடு சென்னை நந்தம்பாக்கத்தில் ஒரு லட்சம் சதுர அடி பரப்பளவில் 75 கோடி ரூபாய் திட்ட மதிப்பீட்டில் மாநில புத்தொழில் மையம் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

தமிழ்நாட்டைச் சேர்ந்த பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர், இளைஞர்கள் படிப்பில் மட்டுமின்றி அறிவில், சிந்தையில், ஆற்றலில், திறமையில் மேம்படுத்துவதை முக்கிய நோக்கமாகக் கொண்டு, வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்கான ‘நான் முதல்வன்’ என்ற திறன் மேம்பாடு மற்றும் வழிகாட்டுதல் திட்டம் மாநிலம் முழுவதும் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. 

ஒவ்வொரு மாவட்டத் தொழில் மையத்திலும் ஒரு ஏற்றுமதி வழிகாட்டி மையம் விரைவில் தொடங்கப்படும். தமிழகம் முழுவதும் கயிறு குழுமங்கள் உருவாக்கி கயிறு தொழிலை மேம்படுத்துவதன் மூலம் தொழில் முனைவோர்கள் மட்டுமல்லாமல், தென்னை விவசாயிகள் பயன் பெற வேண்டும் என்ற நோக்கோடு தமிழ்நாடு கயிறு வணிக மேம்பாட்டு நிறுவனம் கோயம்புத்தூரில் அமைக்கப்பட்டுள்ளது.

ஹோம் டெக்ஸ்டைல்ஸ் எனப்படும் வீட்டு உபயோக ஜவுளிப் பொருள்கள் ஆண்டொன்றுக்கு 8,000 கோடிக்கு மேல் உற்பத்தி செய்யப்பட்டு, அதில், 4,000 கோடி அளவுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்த வகைப் பொருள்கள் தயாரிப்பை சிறப்பு வகைத் தொழில்கள் (Thrust Sector) பிரிவில் சேர்த்து, MSME துறையின் மூலம் முதலீட்டு மானியம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை ஏற்கப்படுகிறது. 

சிறப்பு வகைத் தொழில்கள் (Thrust Sector) பிரிவில் சேர்க்கப்பட்டு, முதலீட்டு மானியம் வழங்கப்படுவதன் மூலம் பல்லாயிரக்கணக்கான நிறுவனங்கள் பயன்பெறும். இதன் மூலமாக லட்சக்கணக்கான தொழிலாளர்கள் பயன்பெறுவார்கள் என்றும் விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார். 



இந்த மாநாட்டில் அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன், மு.பெ.சாமிநாதன், கயல்விழி செல்வராஜ் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Newsletter

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...