கோவையில் விஜயகாந்தின் 70வது பிறந்தநாள்: கோவில், தேவாலயம் மற்றும் தர்காவில் சிறப்பு பிரார்த்தனை

தேமுதிக தலைவர் விஜயகாந்தின் 70வது பிறந்தநாளையொட்டி, கட்சியினர் அவர் உடல்நலம் பெற வேண்டி, புலியகுளம் விநாயகர் கோவில், அந்தோனியார் தேவாலயம் மற்றும் தர்காவில் சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.



கோவை: நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்தின் 70வது பிறந்த நாளை தமிழகம் முழுவதும் உள்ள கட்சி தொண்டர்கள் மற்றும் அவரது ரசிகர்கள் வெகு விமரிசையாக கொண்டாடி வருகின்றனர்.



கோவை மாவட்ட தேமுதிகவினர் அவரது பிறந்தநாளை கொண்டாடும் விதமாக, காய்கடை மைதானத்தின் அருகில் உள்ள தேமுதிக கட்சியின் மாவட்ட தலைமை அலுவலகத்தில் கட்சிக் கொடி ஏற்றப்பட்டு கேக் வெட்டி கொண்டாடி பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினர்.



இதையடுத்து, அவர் உடல்நலம் பெற புலியகுளம் பெரிய விநாயகர் கோவிலில் சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டனர்.



பின்னர், அதே பகுதியில் அமைந்துள்ள அந்தோணியார் தேவாலயத்தில் மெழுகுவர்த்தி ஏந்தி சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.



இதனையடுத்து, திருச்சி சாலையில் உள்ள தர்காவில் கேப்டன் விஜயகாந்த் பிறந்தநாளையொட்டி சிறப்பு தொழுகையும் நடத்தப்பட்டது.

இந்த நிகழ்ச்சிகளில், கோவை மாநகர தேமுதிக மாவட்ட செயலாளர் சிங்கை சந்துரு, மாநில சட்ட ஆலோசகர், முருகராஜ் மற்றும் மாவட்ட பொருளாளர், ராகவலிங்கம் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...