கோவையில் ஐடி நிறுவனங்கள் தொடங்க பல்வேறு நிறுவனங்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர் - அமைச்சர் மனோ தங்கராஜ்

கோவை தனியார் கல்லூரில் "ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான்' இறுதி போட்டியை அமைச்சர் மனோ தங்கராஜ் துவங்கி வைத்து பேசுகையில், கோவையில் ஐடி நிறுவனங்களை தொடங்க பல்வேறு நிறுவனங்கள், அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர், என்றார்.



கோவை: மலுமிச்சம்பட்டி பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் “ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான்” இறுதி போட்டிகள் இன்று துவங்கியது. பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 30 அணிகளில், 210 மாணவ, மாணவிகள் பங்கேற்கும் இப்போட்டியை, தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் துவங்கி வைத்தார்.



பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், தமிழகத்தில் அதிகளவு திறன் மேம்பாடு போட்டிகள் நடத்த தகவல் தொழில்நுட்பத்துறை பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. இ-சேவை பணிகளையும் தீவிர படுத்தியுள்ளோம்.

சாதாரண மக்களுக்கும் எளிய முறையில் அனைத்து திட்டங்களும் சென்றடைய வேண்டும் என்ற குறிக்கோளுடன் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், தகுதியில்லாதவர்களுக்கு திட்டம் கிடைக்கிறது, அதே போல தகுதியுள்ள மக்களுக்கு திட்டம் செல்வதில்லை என்ற நிலையும் காணமுடிகிறது.



இதற்கு தரவுகள் இல்லாததே முக்கிய காரணம், அதற்காக தான் இ - கவர்னன்ஸ் முறை நடைமுறைப்படுத்த உள்ளோம். தமிழக முதல்வரின் அறிவுறுத்தலின் படி மாநிலத்தில் உள்ள மொத்த தரவுகளையும் கொண்டு நிர்வாகம் செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

அதே போல, தமிழகத்தை திறன் மேம்பாடு மற்றும் தொழில்நுட்ப மையமாக மாற்ற வேண்டும் என்பது தகவல் தொழில் நுட்ப துறையின்முக்கிய குறிக்கோளாகும். புதிய கண்டுபிடிப்புகள், ஸ்டார்ட் அப்களை (Start-up)ஊக்குவிக்க வேண்டும்.



தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் ஐடி துறை பரவலாக்கப்படும். கிராமப்புறங்களிலும் நகரில் உள்ள வளர்ச்சியை ஏற்படுத்த வேண்டும் என்பதே திராவிட மாடல் என்கிறோம், அதை இலக்காக வைத்து, 1,500 கிராமங்களில் பைபர் இணைய சேவை அமைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

வேகமாக வளர்ந்து வரும் கோவை மாவட்டம், தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியிலும் பெரும்பங்கு வகிக்கிறது. பல்வேறு ஐடி நிறுவனங்கள்,கோவையில் புதிய நிறுவனங்களைதொடங்க அதிக ஆர்வம் காட்டுகின்றனர். அமேசான் உள்ளிட்ட பல்வேறு புதியநிறுவனங்கள் மூலம் வேலை வாய்ப்பு அதிகரித்துள்ளது.



கோவை மாவட்டத்திற்கு இந்த அரசு அதிக கவனம் செலுத்தி வருகிறது.

கடந்த 15 மாதங்களில் 5 முறை முதல்வர் கோவைக்கு மட்டும்வந்துள்ளார்.

கோவையில் உள்ள எல்கார்ட் கட்டிட பணிகள் விரைவில் நிறைவடையஉள்ளது. கல்வி, தொழில்துறை, கட்டமைப்பு வசதிகள் என வளர்ச்சிப் பாதையில் செல்லும் கோவை மாவட்டத்தை ஊக்குவிக்க வேண்டும் என்பது நமது கடமை.

இவ்வாறு அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்தார்.





Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...