லக்னோவில் இருந்து 12 வயது சிறுமி கோவைக்கு கடத்தல்; தந்தை டிவிட்டர் புகார் - கோவை சிட்டி சைபர் கிரைம் மற்றும் ரெயில்வே போலீசார் விசாரணை.

சிறுமியின் தந்தை எஃப் ஐ ஆர் மற்றும் சிறுமியின் புகைப்படத்தை டுவிட்டரில் பதிவிட்டு, கடத்திய குற்றவாளிகள் கோவைக்கு வருவதாக தெரிவித்துள்ளதால், தமிழ்நாடு காவல் துறை ரயில்வே போலீசாரை டேக் செய்து உதவி கோரியுள்ளார்.


கோவை: வடமாநிலத்தை சேர்ந்த 12 வயது சிறுமி ஒருவர் கடத்தப்பட்ட நிலையில், அவரை கடத்தியவர்கள் கடைசியாக கோவைக்கு வருவதாக தெரிவித்துள்ளதால், சிறுமியின் தந்தை தமிழக காவல்துறையை டிவிட்டர் பக்கத்தில் டேக் செய்து உதவி கோரியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அந்த சிறுமியின் தந்தை தனது டிவிட்டர் பக்கத்தில் தனது 12 வயது மகளை சிலர் கடத்திச் சென்று விட்டதாகவும், அவர்கள் இன்று இரவு அல்லது நாளைய தினம் கோவை ரயில் நிலையத்திற்கு வருவார்கள் என தொலைபேசியில் தெரிவித்ததாக குறிப்பிட்டுள்ளார்.

மேலும், அந்த பதிவில் தனது மகளின் புகைப்படத்தையும், கடத்தல் குறித்து காவல்நிலையத்தில்அளித்த புகாரின் முதல் தகவல் அறிக்கையின் (FIR) நகலையும் இணைத்துள்ள அவர், தமிழக காவல்துறையையும், ரயில்வே காவல்துறையையும் டேக் (Tag) செய்து உதவி கோரியிருந்தார்.

குற்றவாளிகள், கோவை ரயில் நிலையத்திற்கு வருவார்கள் என்று தெரிவித்திருப்பதால், தமிழக காவல்துறை, கோவை நகர காவல்துறைக்கும், ரயில்வே போலீசாருக்கும் குற்றவாளிகளை பிடிக்க அலர்ட் கொடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, பதிலளித்துள்ள கோவை மாநகர காவல் ஆணையாளர்பாலகிருஷ்ணன், கடத்தல் கும்பலை பிடிக்க கோவை சிட்டி சைபர் கிரைம், ரயில்வே போலீசாருடன் இணைந்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருவதாக, தெரிவித்துள்ளார்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...