வெள்ளலூர் பேருந்து நிலையத்தை மாற்ற முயன்றால் தொடர் உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் - கோவையில் எடப்பாடி பழனிசாமி

அதிமுக நிர்வாகியின் இல்ல விழாவில் பங்கேற்க கோவை வந்துள்ள முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்களை கிடப்பில் போடுவதையே திமுக வேலையாக வைத்திருப்பதாக குற்றம் சாட்டினார்.



கோவை: அதிமுக நிர்வாகியின் குடும்ப நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று கோவைக்கு வந்துள்ளார்.



கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய போது, அதிமுக ஆட்சி இருக்கும் பொழுது கோவை மாவட்டத்திற்கு மாநகராட்சிக்கும் பல்வேறு திட்டங்களை நிறைவேற்றப்பட்டது. திமுக அரசு பொறுப்பேற்றவுடன் அதிமுக கொண்டு வந்த திட்டங்களை முடக்குவதும் ரத்து செய்வதுமாகவே இருக்கின்றனர்.

கோவை மாநகராட்சியில் ஆட்சி மாற்றத்திற்கு பிறகு சுமார் 150 கோடி மதிப்பில் 500க்கும் மேற்பட்ட பணிகளை ரத்து செய்துள்ளனர். திமுக ஆட்சியில் 18 சதவிகிதம் கமிஷன் கேட்டதால் எந்த ஒப்பந்ததாரரும் பணியை எடுப்பதற்கு முன்வரவில்லை.

வெள்ளலூர் பேருந்து நிலையத்தை பொருத்தவரை 50 சதவிகித பணிகள் நிறைவடைந்த நிலையில் அதனையும் இந்த அரசு கைவிட முடிவு செய்துள்ளது. தமிழக முதல்வருக்கு நெருக்கமான ரியல் எஸ்டேட் நிறுவனம், எல் அண்ட் டி சாலையில் நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலத்தை வாங்கியுள்ளதால் வெள்ளலூர் பேருந்து நிலையத்தை அங்கு மாற்றினால் அந்த நிலங்கள் அனைத்தும் அதிக விலை போகும் என்பதால் தான் பேருந்து நிலையத்தை மாற்ற முயற்சிக்கின்றனர். இதனால் கோடிக் கணக்கில் மக்களுடைய வரி பணம் வீணடிக்கப்படுகிறது.

வெள்ளலூர் பேருந்து நிலையத்தை மாற்ற முயன்றால் கோவை மாநகராட்சியில் தொடர் உண்ணாவிரத போராட்டம் நடைபெறும். மெட்ரோ ரயில் திட்டத்தையும், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தையும் கிடப்பில் போட்டுள்ளனர்.



அத்திக்கடவு - அவிநாசி திட்டம் நான்கு மாதங்களுக்கு முன்பு நிறைவேற்றப்பட்டு இருக்க வேண்டும். ஆனால், இந்த அரசின் மெத்தன போக்கினால் தண்ணீர் வீணாக கடலில் கலக்கிறது. எந்த திட்டத்தையும் இவர்கள் முழுமையாக நிறைவேற்ற வில்லை

கோவை மாநகரப் பகுதிகளில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் விதமாக மேற்கு புறவழிச் சாலைக்காக நிலம் எடுக்கும் பணிகள் அதிமுக ஆட்சியில் வேகமாக செயல்பட்டு வந்தது. ஆனால், ஆட்சி மாற்றம் வந்தவுடன் அதுவும் கிடப்பில் போடப்பட்டு விட்டது.

மூன்றாவது கூட்டு குடிநீர் திட்டத்தையும் இந்த் அரசு கிடப்பில் போட்டு விட்டது. கோவை விமான நிலைய விரிவாக்கத்திற்கும் போதுமான நிதி ஒதுக்காத காரணத்தினால் அதுவும் முடங்கி இருக்கிறது. ஆனைமலை நல்லாறு திட்டத்திற்காக கேரளா அரசுடன் பேச்சுவார்த்தை முன்னெடுக்காத அரசாங்கமாக இந்த அரசாங்கம் உள்ளது.

மின்கட்டண உயர்வு கைவிடப்பட வேண்டும். திமுக அரசு ஆட்சிப் பொறுப்பேற்கும் பொழுது கூறிய பெட்ரோல் டீசல் விலை குறைப்பு, பழைய ஓய்வூதிய திட்டம் முதியோர் ஓய்வூதிய உயர்வு இல்லத்தரசிகளுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் திட்டம், 100 நாள் வேலை திட்டம் 150 நாளாக உயர்த்தப்படும் என்ற அறிவிப்பு போன்ற பல்வேறு திட்டங்களை செயல்படுத்தாப்ப்படாமல் உள்ளது.

திமுக ஆட்சியில் எதற்கெடுத்தாலும் குழு அமைக்கப்படுகிறது. இதுவரை 38 குழுக்கள் அமைத்து சரித்திரம் படைத்துள்ளது திமுக அரசு. ஒருவேளை இந்த 38 குழுக்களையும் கண்காணிப்பதற்கும் ஒரு குழு அமைக்கப்படும் போல தெரிகிறது.



தற்பொழுது சட்ட ஒழுங்கு அடியோடு சீரழிந்து விட்டதாகவும் எங்கே பார்த்தாலும் போதைப் பொருள் தாராளமாக கிடைக்கிறது. ஆன்லைன் ரம்மி சூதாட்டத்தை ரத்து செய்யாமல், சூதாட்டத்திற்கு கருத்து கேட்பு கூட்டம் நடக்கும் அரசாக இந்த அரசு உள்ளது.

இதற்கான தக்க பாடத்தை அடுத்த தேர்தலில் மக்கள் புகட்டுவார்கள். இந்த அரசாங்கம் கும்பகர்ணன் போல் தூங்கி கொண்டிருப்பதாகவும் அதனை நாங்கள் தட்டி எழுப்பிக் கொண்டிருக்கிறோம்.

முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆறுக்குட்டி திமுகவில் இணைந்தது குறித்து கேட்ட கேள்விக்கு பதில் அளித்த அவர், ஆறுகுட்டி அதிமுகவில் இருந்தார் தற்பொழுது ஆளும் கட்சியாக திமுக இருந்து வருவதால் வேடந்தாங்கல் பறவை போல் அவர் தாவி உள்ளார். அவரை நம்பி அதிமுக கட்சி இல்லை, ஒன்றரை கோடி தொண்டர்களை நம்பித்தான் அதிமுக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. 

டிடிவி தினகரன் குறித்த கேள்விக்கு முதலில் அவர், தன்னை அமலாக்கத்துறையில் இருந்து காப்பாற்றிக் கொள்ளட்டும். தொண்டர்கள், சாதாரண மக்கள் உட்பட அனைவரும் என்னை வந்து சந்திக்கலாம் ஆனால், ஸ்டாலின் யாரை சந்திக்கிறார் என கேள்வியும் எழுப்பினார்.

Newsletter

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...