அமைச்சர் அன்பில் மகேஷ் குறித்து சர்ச்சைக்குரிய செய்தி வெளியிட்டதாக நாளேட்டை எரித்து உதயநிதி ஸ்டாலின் ரசிகர் மன்றத்தினர் ஆர்ப்பாட்டம்

ஜூனியர் விகடனில் பள்ளி கல்விதுறை அமைச்சர் அன்பில் மகேஷ், முதலமைச்சர், உதயநிதி ஸ்டாலின் அடங்கிய புகைப்படத்துடன் சர்ச்சைக்குரிய கட்டுரை வெளியிட்டதாக கூறி மாவட்ட மாநகர தலைமை உதயநிதி ஸ்டாலின் ரசிகர் நற்பணி மன்றத்தினர் கோவையில் ல ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



கோவை: மாதந்தோறும் வெளியிடப்படும் பிரபல தனியார் நாளேட்டில் (ஜூனியர் விகடன்) பள்ளி கல்விதுறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும் அவருடன் முதலமைச்சர், உதயநிதி ஸ்டாலின் உள்ள புகைப்படத்துடன் கட்டுரை ஒன்று வெளியாகியுள்ளது.

அதில், சொதப்பலில் பள்ளிக்கல்வித்துறை, அழுத்தத்தில் ஆசிரியர்கள், அந்தரத்தில் பயிற்சி மையம், கல்வி அமைச்சர் பெயில் என பல்வேறு தலைப்புகளில் அமைச்சர் குறித்து அவதூறு செய்திகளை வெளியிட்டுள்ளதாக கூறி கோவை மாவட்ட மாநகர தலைமை உதயநிதி ஸ்டாலின் ரசிகர் நற்பணி மன்றத்தினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை தெற்கு தாசில்தார் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்திற்கு, மாவட்ட தலைவர் இருகூர் பூபதி தலைமை தாங்கினார்.



இந்த ஆர்ப்பாட்டத்தில் ஜூனியர் விகடன் நாளேட்டினை எரித்து, கண்டனம் கோஷங்களை எழுப்பினர்.



மேலும், இந்த நாளேடுகள் கடைகளில் விற்பனை செய்தால் மாவட்டம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவோம், என போராட்டத்தின் போது தெரிவித்தனர்.

Newsletter

கிணத்துக்கடவில் 10,000 மரக்கன்றுகள் நடவு தொடக்கம்

கிணத்துக்கடவு கொண்டம்பட்டி ஊராட்சியில் சமூக பங்களிப்பு நிதியின் கீழ் 10,000 மரக்கன்றுகள் நடும் பணியை மாவட்ட ஆட்சித்தலைவர...

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பிய வழக்கில் 3 காவலர்கள் பணியிடை நீக்கம்

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து தப்பிய மோசடி வழக்கு கைதிக்கு உதவியதாக இரண்டாம் நிலை காவலர் மற்றும் கார் ஓட்டுநர் கைது...

காடுவெட்டிபாளையம் பகுதியில் நாளை மின்தடை

பாப்பம்பட்டி, என்.ஜி.பாளையம், எஸ்.ஆர்.பாளையம், அன்னூர் பகுதி மற்றும் சுண்டமேடு பகுதியில் ஜூன் 15 காலை 9 மணி முதல் மாலை 4...

பட்டணம் பகுதியில் நாளை மின்தடை அறிவிப்பு

பட்டணம், பட்டணம் புதூர், கம்பன் நகர், நொய்யல் நகர், சத்யநாராயணபுரம், காரவளி சாலை, நாகமநாயக்கன்பாளையம், காவேரி நகர் மற்று...

பயனற்ற நடைபாதை மேம்பாலம்: அவிநாசி–கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் மக்கள் முற்றுகை

அவிநாசி–கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் செல்லக்கூடிய மேம்பாலம் அமைக்கக் கோரிய நிலையில், நடைபாதை மேம்பாலப் பணிகள...

கோவையில் IWMA கருத்தரங்கு: தொழிற்சாலை கழிவு மேலாண்மை குறித்து விழிப்புணர்வு

கோவையில் நடைபெற்ற தொழில்துறை கழிவு மேலாண்மை கருத்தரங்கில், தொழிற்சாலை கழிவுகள் சட்டவிரோதமாக அப்புறப்படுத்தப்படுவதைத் தடு...