கோவைப்புதூர் அருகே கட்டிட வேலை செய்யும் தாயுடன் தங்கி இருந்த 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த 27 வயது இளைஞர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் தலைமறைவான குற்றவாளியை பிடிக்க தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.
கோவை: கோவை புதூர் அருகே தனியார் குடியிருப்பு பகுதியில் 200க்கும் மேற்பட்ட வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன.இந்த கட்டிட பணிகளில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்தகட்டிட தொழிலாளர்கள் அங்கேயே தங்கியிருந்து வேலை செய்து வருகின்றனர்.
இதனிடையே அங்கு பெண் ஒருவர் தனது 6 வயது பெண் குழந்தையுடன் அங்கேயே தங்கி பணியாற்றி வந்தார்.இந்நிலையில், உடன் பணியாற்றும் 27வயது இளைஞர் ஒருவர், அந்த6 வயது சிறுமியுடன்பேச்சு கொடுத்து பழகி வந்துள்ளார்.
இந்த நிலையில் சிறுமியின் தாய் வீட்டில் இல்லாத போது அங்கு வந்த அந்த இளைஞர், ஆறு வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதில் சிறுமிக்கு உடல் நலம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட சிறுமி இதுகுறித்து தனது தாயிடம் கூறிய நிலையில், சிறுமியின் தாய் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த கோவை அனைத்து மகளிர் காவல்நிலைய ஆய்வாளர் தெய்வமணி, தலைமறைவான கட்டிட தொழிலாளி மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், தப்பியோடிய நபரை பிடிக்க தனிப்படை அமைத்து தேடி வருவதாக, தெரிவித்துள்ளார்.