கோவையில் ஒரே மேடையில், ஒரு லட்சத்து ஏழாயிரம் பயனாளிகளுக்கு முதல்வர் மு க ஸ்டாலின் நலதிட்ட உதவிகள்  இன்று வழங்கவுள்ளார்.

கோவை மாவட்டம் ஈச்சனாரியில் நடைபெறுகின்ற அரசு விழாவில் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ரூ.272 கோடி மதிப்பில் முடிவுற்ற திட்டப் பணிகளை  திறந்து வைத்து ரூ.663 கோடி மதிப்பில் புதிய திட்டப் பணிகளுக்கு அடைக்கல் நாட்டவுள்ளார்.


கோவை: கோவை மாவட்டம் ஈச்சனாரியில் நடைபெறுகின்ற அரசு விழாவில், அதிகபட்சமாக 1 லட்சத்து 7 ஆயிரத்து 32 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கி,ரூ.272 கோடி மதிப்பில் முடிவுற்ற திட்டப் பணிகளைதிறந்து வைத்து மற்றும்ரூ.663 கோடி மதிப்பில் புதிய திட்டப் பணிகளுக்கு முதல்வர்இன்று அடைக்கல் நாட்டவுள்ளார். 



கோவை வந்துள்ள தமிழ்நாடு முதல்வர் மு க ஸ்டாலின் ஒரே இடத்தில், ஒரே மேடையில் அதிகபட்சமாக 1 லட்சத்து 7 ஆயிரத்து 32 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளையும் வழங்கவுள்ளார். இதற்கு முன்,கோவையில் நடந்த நிகழ்ச்சியில் பயன்பெற்ற பயனாளிகளை ஒப்பிடும்போது, இன்றையநிகழ்ச்சியின் பயனாளிகள் நான்கு மடங்கு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. 



பொதுப்பணித்துறை,கோவை மாநகராட்சி,தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம், பேரூராட்சிகள், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிகள் துறை, நீர்வளத் துறை,உயர்கல்வித் துறை, பொதுப்பணித்துறை (கட்டடங்கள் மற்றும் பராமரிப்பு), நெடுஞ்சாலைத்துறை, வேளாண்மை பொறியியல்துறை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை, வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறை, கூட்டுறவுத் துறை ஆகிய துறைகளின் சார்பில் நிறைவேற்றப்பட்டுள்ள ரூ.272 கோடி மதிப்பில் 229 முடிவுற்ற பணிகளை முதல்வர் திறந்து வைப்பார்.

அதே போல, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம், கோவை மாநகராட்சி, நீர்வளத் துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிகள் துறை, பேரூராட்சிகள், நெடுஞ்சாலைத்துறை, நகராட்சிகளின் நிர்வாகம், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர்நலத்துறை (தாட்கோ- பொறியியல் துறை),பொதுப்பணித்துறை (கட்டடங்கள் மற்றும் பராமரிப்பு), பொதுப்பணித்துறை(மருத்துவப்பணிகள்) கூட்டுறவுத் துறை, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறைஆகிய துறைகளின் சார்பில் ரூ. 663 கோடி மதிப்பில் 748 புதிய திட்டப் பணிகளுக்கு முதலமைச்சர் அடிக்கல் நாட்டுவார்.

அரசு நலத்திட்ட உதவிகள் – மருத்துவம் –மக்கள் நல்வாழ்வுத்துறை,மாவட்ட முன்னோடி வங்கி, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை,தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை,கூட்டுறவுத்துறை, கோவை மாநகராட்சி, பள்ளிக் கல்வித்துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, சமூக நலம் மற்றும் மகளிர் உரிமைத்துறை, தொழில்வணிகத் துறை (மாவட்ட தொழில் மையம்), தோட்டக்கலை மற்றும் மலைப் பயிர்கள் துறை, கால்நடை பராமரிப்புத் துறை, வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறை, பேரூராட்சிகள் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில் பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று வழங்குகின்றார்.

இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் -- செந்தில்பாலாஜி, கயல்விழி செல்வராஜ், சாமிநாதன், முத்துச்சாமி, ராமசந்திரன், மாவட்ட ஆட்சியர் சமீரன், மாநகராட்சி ஆணையாளர் பிரதாப், மேயர் கல்பனா ஆனந்தகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொள்கின்றனர்.

Newsletter

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...