கோவை குறிச்சி குளம் அருகே இருசக்கர வாகனத்தின் மீது டிப்பர் லாரி மோதியதில் கல்லூரி மாணவர் பலி - இருவர் படுகாயம்

கோவை குறிச்சி குளம் அருகே டிப்பர் லாரி மோதியதில் கட்டுப்பாட்டை இழந்த இருசக்கர வாகனம் சாலையோர மரத்தில் மோதி விபத்து. படுகாயமடைந்த மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், விஷ்ணு என்ற கல்லூரி மாணவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.


கோவை: கோவை மாவட்டம் செல்வபுரம் அடுத்த தில்லைநகர் பகுதியை சேர்ந்தவர் ரவி. இவரது மகன் விஷ்னு(18) மலுமிச்சம்பட்டி பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் பிபிஏ முதலாமாண்டு படித்து வந்துள்ளார்.

இந்நிலையில் விஷ்ணு தனது நண்பர்களான இடையர் வீதியை சேர்ந்த விக்னேஷ், மற்றும் சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த சதீஸ்வரன் ஆகியோரை தனது இருசக்கர வாகனத்தில் ஏற்றிக் கொண்டு கல்லூரிக்கு சென்றுள்ளார்.

குறிச்சி குளம் அருகே சென்ற போது, எதிரே லோடு ஏற்றி வந்த டிப்பர் லாரி ஒன்று இவர்களது இருசக்கர வாகனத்தின் மீது மோதியதாக தெரிகிறது.



இதில் நிலைதடுமாறிய இருசக்கர வாகனம் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் இருந்த மரத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது.

விபத்தில் படுகாயமடைந்த மாணவர்களை அங்கு இருந்தவர்கள் மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதில் படுகாயமடைந்த விஷ்ணு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

மேலும் காயமடைந்த சதீஸ்வரன், விக்னேஷ் ஆகியோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்து தொடர்பாக போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...