இன்று மாலை கோவை வருகிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின் - பாதுகாப்பு பணியில் 3000-க்கும் மேற்பட்ட போலீசார்

கோவை, திருப்பூர் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக இன்று மாலை கோவை வருகிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின். ஈச்சனாரியில் நடைபெறும் நிகழ்ச்சியில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பயனாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.


கோவை: கோவை, திருப்பூர் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மற்றும் தி.மு.க. கட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக மு.க.ஸ்டாலின்4 நாள் சுற்றுப்பயணமாக இன்று கொங்கு மண்டலத்திற்கு வருகை தருகிறார்.

இதற்காக இன்று இரவு 7 மணிக்கு சென்னையில் இருந்து விமானத்தில் புறப்படும் முதலமைச்சர், இரவு 8 மணிக்கு கோவை விமான நிலையத்திற்கு வரும் அவருக்கு அமைச்சர் செந்தில்பாலாஜி தலைமையில், முதலமைச்சருக்கு உற்சாக வரவேற்பு அளிப்பதற்கான எற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.

வரவேற்பு முடிந்ததும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காரில் கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள அரசு விருந்தினர் மாளிகைக்கு செல்கிறார்.

இரவு அங்கேயே தங்கும் முதலமைச்சர் நாளை (புதன்கிழமை)காலை10 மணிக்கு கோவையை அடுத்த ஈச்சனாரியில் அரசு சார்பில் நடக்கும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்க உள்ளார்.

இந்த விழாவில் 1 லட்சத்து 7 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்குகிறார். இதுதவிர பல்வேறு அரசு துறைகள் சார்பில் நிறைவேற்றப்பட்டுள்ள பல்வேறு முடிவுற்ற திட்டப் பணிகளையும் மக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைக்க உள்ளார்.

மேலும் பல்வேறு அரசு துறைகளின் சார்பில் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டிவிட்டு உரையாற்றுகிறார். அதன்பிறகு கார் மூலம் பொள்ளாச்சிக்கு செல்லும் முதலமைச்சர், மாலை 5 மணிக்கு ஆச்சிப்பட்டியில் ஒருங்கிணைந்த கோவை மாவட்ட திமுக சார்பில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசுகிறார்.

அப்போது அவரது முன்னிலையில் மாற்றுக்கட்சியை சேர்ந்த பலரும் தி.மு.க.வில் இணைய உள்ளனர். தொடர்ந்து அங்கு நிகழ்ச்சியை முடித்து விட்டு இரவு திருப்பூருக்கு புறப்பட்டுச் செல்கிறார்.

இதனையடுத்து 25-ந் தேதி காலை 10 மணிக்கு திருப்பூரில் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் நிகழ்ச்சியில் பங்கேற்று பேசும் முதலமைச்சர்,பிற்பகல்ஈரோடு மாவட்டம் கோபி செட்டிபாளையத்திற்கு செல்கிறார்.

இதனை தொடர்ந்து, மாலை 5 மணிக்கு கள்ளிப்பட்டியில் நடக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்று முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் வெண்கல சிலை மற்றும் படிப்பகத்தை திறந்து வைக்கிறார்.

இதனையடுத்து ஈரோட்டுக்கு சென்று தங்கும் முதலமைச்சர், 26-ம் தேதி காலை 10.30 மணிக்கு ஈரோடு பெருந்துறையில் நடக்கும் அரசு விழாவில் பங்கேற்று நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசுகிறார்.

இதனையடுத்து கார் மூலம் கோவை செல்லும் முதலமைச்சர் அன்று மாலை 6 மணிக்கு தனியார் கல்லூரியில் நடக்கும் 75வது ஆண்டு விழாவில் பங்கேற்கிறார். 3 மாவட்ட சுற்றுப்பயணத்தை முடித்து கொண்டு 26ஆம் தேதி இரவு8.35 மணிக்கு கோவையில் இருந்து விமானம் மூலம் சென்னைக்கு புறப்பட்டு செல்கிறார்.

இதற்கிடையே கோவை ஈச்சனாரி அருகே விழா நடைபெறும் பகுதியில் அமைக்கப்பட்டு வரும் மேடை பணிகளை அமைச்சர் செந்தில்பாலாஜி பார்வையிட்டு ஆய்வு செய்தார். முதலமைச்சர் வருகையை முன்னிட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வெளி மாவட்டங்களில் இருந்து ஏராளமான போலீசார் இன்று காலை கோவைக்கு வந்தனர்.

பொள்ளாச்சி மெயின் ரோடு, விழா நடக்கும் இடம் மற்றும் ஆச்சிப்பட்டி பகுதிகளில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். நாளை விழா நடக்கும் பகுதிகளில் சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

Newsletter

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...