பாதிக்கப்பட்ட கால்நடைகளின் உரிமையாளர் ராஜ்குமார் அளித்த புகாரின் பேரில் கால்நடைகளுக்கு காயம் ஏற்படுத்தி துன்புறுத்தல் ஆகிய பிரிவுகளில் மேட்டுப்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து, தலைமறைவாகிய இருவரையும் தேடி வருகின்றனர்.
கோவை: மேட்டுப்பாளையத்தை அடுத்துள்ள கல்லாறு ரயில்வே கேட் அருகே 4 நாட்களுக்கு முன்னர் சுமார் 20 மேற்பட்ட எருமை மாடுகள் மேய்ச்சலுக்கு சென்ற போது, மர்ம நபர்கள் மாட்டின் மீது ஆசிட் வீசியதாக, விவசாயி புகார் அளித்திருந்தார்.

இந்த நிலையில், கறவை மாடுகள் மீது ஆசிட் வீசிய விவகாரத்தில்தனியார் நர்சரி தோட்ட உரிமையாளர் ரவிச்சந்திரன் மற்றும் பணியாளர் மணிகண்டன் ஆகியோர் மீது மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பாதிக்கப்பட்ட கால்நடைகளின்உரிமையாளர் ராஜ்குமார் அளித்த புகாரின் பேரில் கால்நடைகளுக்குகாயம் ஏற்படுத்தி துன்புறுத்தல் பிரிவுகளில் மேட்டுப்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
ரவிச்சந்திரன் மற்றும் பணியாளர் மணிகண்டன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ள நிலையில் இருவரும் தலைமறைவாகியதால்,தப்பியோடிய இருவரையும்மேட்டுப்பாளையம் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
என்ன நடந்தது..?
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை அடுத்துள்ள கல்லாறு ரயில்வே கேட் அருகே தேனி மாவட்டத்தை சேர்ந்த ராஜ்குமார் என்பவர் கடந்த 2008 முதல் அதே பகுதியில் விவசாயம் செய்து கொண்டு, 40 க்கும் மேற்பட்ட எருமை மாடுகளை வளர்த்து வருகிறார்.
கடந்த 4 நாட்களுக்கு முன்னர் சுமார் 20 மேற்பட்ட எருமை மாடுகள் மேய்ச்சலுக்கு சென்ற போது, மர்ம நபர்கள் மாட்டின் மீது ஆசிட் வீசியதாக கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று முந்தினம் வழக்கம் போல் பண்ணையில் மாடுகளை பராமரித்து வந்த போது மாடுகளின் தோல் உரிந்து பெரிய காயங்களாக மாறியுள்ளது.

இதை கண்டு அதிர்ச்சியடைந்த ராஜ்குமார் மேட்டுப்பாளையம் போலீசாருக்கு தகவல் அளித்துள்ளார். அங்கு வந்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தொழில் போட்டி முன் விரோதம் காரணமாக இச்சம்பவம் நடைபெற்றதா? அல்லது வேறு ஏதேனும் காரணமா ? என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தற்போது, பாதிக்கப்பட்டுள்ள கால்நடைகளுக்கு கால்நடை மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.