கோவையில் காரில் கடத்தி வந்த ரூ.35 லட்சம் மதிப்பிளான 2.265 டன் புகையிலை பொருட்கள் பறிமுதல்.

தடைசெய்யப்பட்ட போதை பொருட்களை கடத்தி வந்த சேரன் நகர் பகுதியை சேர்ந்த அப்பாஸ் என்பவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்த போலீசார், இவ்வழக்கில் தொடர்புடைய இரண்டு நபர்களை தேடி வருகின்றனர்.


கோவை மாவட்ட எஸ்.பி பத்ரிநாராயணன், உத்தரவின் பேரில் கோவை மாவட்டத்தில் சட்டத்திற்கு விரோதமாக அரசால் தடை செய்யப்பட்ட மற்றும் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தக்கூடிய போதைப்பொருள்களை மற்றும் குட்கா பொருட்களை விற்பனை செய்பவர்கள் மீது காவல்துறையினர் கைது நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

அதன் அடிப்படையில் நேற்றுபெரியநாயக்கன்பாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் புகையிலை பொருட்களை விற்பனைக்கு பதுக்கி வைத்திருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், உதவி ஆய்வாளர் ஜெயபிரகாஷ், தலைமையில் காவலர்கள்பாலசுப்பிரமணி, முத்தமிழரசன், வீரமணி ஆகியோர்களுடன் மத்தம்பாளையம் சாலை தனியார் கல்லூரி அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர்.



அப்போது அவ்வழியாக வந்த சேரன் நகரை சேர்ந்த அப்பாஸ் (43) என்பவர் வந்த காரை நிறுத்தி சோதனையிட்ட போது, அதில் புகையிலைப் பொருட்களை விற்பனைக்காக கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து,அப்பாஸை கைது செய்து போலீசார் காரில் இருந்த ஹான்ஸ், கூல் லிப், விமல் பான் மசாலா, வி1 மசாலா எனமொத்தம் சுமார் ரூ.35 லட்சம் மதிப்புள்ள மொத்தம் 2.265 டன் புகையிலை பொருட்கள், நான்கு சக்கர வாகனம் மற்றும் இரண்டு சக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

இதையடுத்து தடைசெய்யப்பட்ட போதை பொருட்களை கடத்தி வந்த அப்பாஸ் என்பவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர், மேலும், இவ்வழக்கில் தொடர்புடைய இரண்டு நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். மேலும் இவர்கள் கோவை மாவட்டத்தில் உள்ள மேட்டுப்பாளையம் மற்றும் கோவை வடக்கு பகுதியில் உள்ள சிறு மற்றும் பெரிய கடைகளுக்கு தடை செய்யப்பட்ட பொருட்களை விற்பனை செய்து சமூக சீர்கேடு ஏற்படுத்தியுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்வழக்கில் திறம்பட செயல்பட்டு எதிரிகளை கைது செய்த தனிப்படை காவல்துறையினர், பெரியநாயக்கன்பாளையம் டி.எஸ்.பி நமச்சிவாயம் மற்றும் காவல் ஆய்வாளர் தாமோதரன் ஆகியோரை எஸ்.பி. பத்ரிநாராயணன் பாராட்டினார்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...