கரிவரதராஜ பெருமாள் கோவிலுக்கு சொந்தமான, நாஸ் தியேட்டர் அருகே இருந்த ரூ.5.70 கோடி மதிப்புள்ள 7.12 சென்ட் வணிக வளாக கட்டிடம் மற்றும் குடியிருப்பை அறநிலையத்துறையினர் மீட்டனர்.
கோவை: கோவை கோட்டைமேடு பகுதியில் உள்ள கரிவரதராஜ பெருமாள் கோவிலுக்கு சொந்தமான, வணிக வளாகக் கட்டிடம் மற்றும் குடியிருப்பு, பகுதி ஆகியவை நீண்ட நாட்களாக தனியார் ஆக்கிரமிப்பில் இருந்து வந்தது.
இந்நிலையில், கோவிலுக்கு அருகே, நாஸ் தியேட்டர் சாலையில் உள்ள ரூ.5.70 கோடி மதிப்புள்ள 7.12 சென்ட் வணிக வளாக கட்டிடம் மற்றும் குடியிருப்பை அறநிலையத் துறையினர் மீட்டனர்.

இந்துசமய அறநிலையத்துறை உதவி ஆணையாளர் கருணாநிதி, கோவில் தக்கார் செல்வம் பெரியசாமி, செயல் அலுவலர் சரவணக்குமார், செயல் அலுவலர்கள் வெற்றிச்செல்வன், பாண்டியராஜ், நாகராஜ், அறநிலையத்துறை ஆய்வாளர் ராம்குமார் ஆகியோர் கொண்ட குழு போலீஸ் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் முன்னிலையில், ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டு கோவில் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டது.
இந்த இடம் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோட்டை கரிவரத ராஜ பெருமாள் கோவிலுக்கு சொந்தமான இடம் என்ற அறிவிப்பு பலகை மீட்கப்பட்ட இடத்தில் ஒட்டப்பட்டது.
கடந்த 8 ஆம் தேதி, கோவை சவுரிபாளையத்தில் உள்ள சக்தி மாரியம்மன், பிளேக் மாரியம்மன் திருக்கோவிலுக்குசொந்தமான ரூபாய் 10 கோடி மதிப்பிலான 27.78 செண்ட் கோவில் நிலத்தை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் மீட்டு கோவில் நிர்வாகத்திடம் ஒப்படைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.