கோவையில் BPCL நிறுவனத்தை கண்டித்து சிஐடியு தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

பீளமேடு பகுதியில் இயங்கி வரும் BPCL நிர்வாகத்தை கண்டித்து சிஐடியு தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். PF, ESI இல்லாமல் வேலை செய்வதாகவும், தாமதமாக சம்பளம் வழங்குவது உள்ளிட்ட பல்வேறு செயல்களில் நிர்வாகம் ஈடுபடுவதாக குற்றம் சாட்டினர்.


கோவை: பீளமேடு பகுதியில் இயங்கி வரும் BPCL மற்றும் MDRS நிர்வாகத்தை கண்டித்தும், உரிய நேரத்தில் சம்பளம் வழங்குவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் BPCL அலுவலகம் முன்பு சிஐடியு தொழிலாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



BPCL நிர்வாகம் ஊழியர்களுக்கு எந்த வித சட்ட சலுகையும் இல்லாமல் சொற்பக் கூலிகளை அளிப்பதாகவும், மத்திய அரசு நிறுவனமாக இருந்தாலும் தொழிலாளர்களுக்கு ESI, PF இல்லாமலும், காலத்திற்கு ஏற்ப சம்பளம் இல்லாமலும் பணியாற்றி வருவதாக ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.

தொழிலாளர்களை பழிவாங்கும் நோக்கில் சிஐடியு சங்கத்தின் தலைவர் விக்னேஷ் உட்பட சுரேஷ் மற்றும் விஜய் ஆகிய மூன்று தொழிலாளர்களையும் பொய் புகார் அளித்து BPCL நிர்வாகம் பணிநீக்கம் செய்துள்ளதாகவும், தொழிலாளர்களை மிரட்டுவது, இடமாற்றம் செய்வது, கடினமான வேலைகளை கொடுப்பது, சங்கத்தில் சேர மாட்டோம் என எழுதி வாங்குவது, ஊதியம் கொடுக்க தாமதப்படுத்துவது போன்ற செயல்களில் BPCL நிர்வாகம் ஈடுபட்டு வருவதாகவும் வேதனையுடன் தெரிவித்துள்ளனர்.

BPCL நிர்வாகம் மற்றும் MDRS ஒப்பந்ததாரரும் மத்திய தொழிலாளர் ஆணையர் மற்றும் என்போர்ஸ்மேண்ட் அதிகாரிகள் கூறும் அறிவுரையை ஏற்க மறுத்து பழிவாங்கும் போக்கில் நடந்து கொள்கிறார்கள் என்றும் குற்றம் சாட்டியுள்ளனர்.

மேலும், பயிற்சியற்ற தொழிலாளர்களை பணியில் அமர்த்தி தரமற்ற முறையில் சிலிண்டர்களை அனுப்புகிறார்கள், இதனால் நுகர்வோருக்கு பாதிப்பு ஏற்படும் வாய்ப்புகள் உள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.



மேலும் இந்த சம்பவங்கள் மற்றும் BPCL நிர்வாகத்தின் செயல்பாடுகள் தொடர்பாக மாவட்ட ஆட்சியரிடம் மனுவாகவும் அளித்துள்ளனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...