அரசுக்கு மதுபான கடை முக்கியமா? அல்லது மக்களின் நலன் முக்கியமா? - கோவையில் தனியார் மதுபான கடையை இடமாற்றம் செய்ய கோரி பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

தடாகம் சாலையில் உள்ள கே.என்.ஜி புதூர் - மேட்டுப்பாளையம் இடையே உள்ள சாலையில் இயங்கி வரும் தனியார் மதுபான கூடத்தை வேறு இடத்துக்கு மாற்றக்கோரி ஊர் பொதுமக்கள் பதாகைகளை ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



கோவை: தடாகம் சாலையில் கே.என்.ஜி புதூர் -மேட்டுப்பாளையம் இடையே உள்ள சாலையில் எம்.ஜி.ஆர் நகர் பகுதியில் தனியார் மதுபான பார் ஒன்று செயல்பட்டு வருகிறது.



இந்த மதுபான கடையை வேறு இடத்திற்கு மாற்ற நடவடிக்கை எடுக்கக்கோரி கே.என்.ஜி புதூர், எம்.ஜி.ஆர் நகர் ஊர் பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பதாகைகளை ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



இந்த மதுபான கடையால் அவ்வழியாக செல்லும் பொதுமக்கள், பெண்கள், பள்ளி மாணவர்களுக்கு பல்வேறு இடையூறுகள் ஏற்படுவதாகவும், இதனால், அந்த மதுபான கடையை உடனடியாக அகற்ற வேண்டும் அல்லது வேறு இடத்திற்கு மாற்ற வேண்டுமென முழக்கங்களை எழுப்பினர்.



இது குறித்து பேசிய போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள், அரசுக்கு மதுபான கடை முக்கியமா அல்லது மக்களின் நலன் முக்கியமா என கேள்வி எழுப்பினர். இதன் பின்னர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.



Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...