கோவையில் தான் வளர்த்து வந்த 20க்கும் மேற்பட்ட எருமை மாடுகள் மீது ஆசிட் வீசப்பட்டதாக விவசாயி புகார் - தோல் உரிந்த மாடுகளுக்கு தீவிர சிகிச்சை

மேட்டுப்பாளையத்தை அடுத்துள்ள கல்லாறு ரயில்வே கேட் அருகே 4 நாட்களுக்கு முன்னர் சுமார் 20 மேற்பட்ட எருமை மாடுகள் மேய்ச்சலுக்கு சென்ற போது, மர்ம நபர்கள் மாட்டின் மீது ஆசிட் வீசியதாக கூறப்படுகிறது. போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



கோவை: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை அடுத்துள்ள கல்லாறு ரயில்வே கேட் அருகே தேனி மாவட்டத்தை சேர்ந்த ராஜ்குமார் என்பவர் கடந்த 2008 முதல் அதே பகுதியில் விவசாயம் செய்து கொண்டு, 40 க்கும் மேற்பட்ட எருமை மாடுகளை வளர்த்து வருகிறார்.

கடந்த 4 நாட்களுக்கு முன்னர் சுமார் 20 மேற்பட்ட எருமை மாடுகள் மேய்ச்சலுக்கு சென்ற போது, மர்ம நபர்கள் மாட்டின் மீது ஆசிட் வீசியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் ,நேற்று வழக்கம் போல் பண்ணையில் மாடுகளை பராமரித்து வந்த போது மாடுகளின் தோல் உரிந்து பெரிய காயங்களாக மாறியுள்ளது.



இதை கண்டு அதிர்ச்சியடைந்த ராஜ்குமார் மேட்டுப்பாளையம் போலீசாருக்கு தகவல் அளித்துள்ளார். அங்கு வந்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொழில் போட்டி முன் விரோதம் காரணமாக இச்சம்பவம் நடைபெற்றதா? அல்லது வேறு ஏதேனும் காரணமா ? என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தற்போது, பாதிக்கப்பட்டுள்ள கால்நடைகளுக்கு கால்நடை மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.





Newsletter

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...