கோவையில் நிலைதடுமாறி இருசக்கர வாகனம் அரசு பேருந்து மீது மோதி விபத்து - இளைஞர் பலி; இருவர் படுகாயம்…!

தொண்டாமுத்தூர் புதுப்பாளையம் அருகே இரு சக்கர வாகனம் நிலை தடுமாறி எதிரே வந்த அரசு பேருந்து மீது மோதிய விபத்தில், ராஜமாணிக்கம் (23) என்பவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், இருசக்கர வாகனத்தில் பயணித்த இரு இளைஞர்கள் படுகாயம் அடைந்தனர்.



கோவை: கோவையில் வேகமாக வந்த இருசக்கர வாகனம் அரசு பேருந்து மீது மோதி ஏற்பட்ட விபத்தில், பைக்கில் வந்த இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும், இருவர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வருகின்றனர்.

கோவை வடவள்ளி பகுதியை சேர்ந்தவர் ராஜமாணிக்கம் (23). இவர் பெயிண்டர் வேலை பார்த்து வந்தார். நேற்று இரவு தனது நண்பர்களான அபுதாகீர், வசந்தகுமார் ஆகியோருடன் இரு சக்கர வாகனத்தில் தொண்டாமுத்தூர் சென்றுள்ளனர்.

அப்போது தொண்டாமுத்தூர்புதுப்பாளையம் அருகே சென்ற போது, இரு சக்கர வாகனம் நிலை தடுமாறி எதிரே வந்த அரசு பேருந்து மீது மோதியது. இந்த விபத்தில் ராஜமாணிக்கம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

மேலும், படுகாயமடைந்த அபுதாகீர், வசந்தகுமார் ஆகிய இருவரை அங்கிருந்தவர்கள் உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.சம்பவ இடத்திற்கு வந்த தொண்டாமுத்தூர் போலீசார்விபத்தில் பலியான ராஜமாணிக்கம்உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மது போதையில் இளைஞர்கள்

அதிவேகமாக வாகனத்தை இயக்கினார்களா? என்பது குறித்துமருத்துவ அறிக்கை வந்த பிறகு தான் தெரியவரும் என்று போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்ட நிலையில், விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...